Tuesday 5 October 2010

சன் பிக்சர்ஸ் கில்லாடிகள்

நானும் எந்திரன் விமர்சனம் எழுதி உங்களை எல்லாம் 'எத்தன பேரு'ன்னு எரிச்சலாக்கற எண்ணம் எதுவும் இல்லீங்க; ஆதி அவர்கள் ஒரு பதிவு எழுதி இருந்தாரு(இங்கே). அதை ஆமோதிச்சுப் பின்னூட்டம் போடப் போயி இத்தனையும் எழுதிட்டேன்.

சன் பிக்சர்ஸ் மக்கள் 'எந்திரன்'-ன்னு ஒன்னொன்னையும் விளம்பரப்படுத்தறதும் காசாக்கறதும் இருக்கே, அடேயப்பா !! மத்த படத்துக்குப் போடறா மாதிரி திருப்பி திருப்பி வெறும் விளம்பரத்தைப் போட்டா வேற சேனல் மாத்தாம மக்கள் டிவியே ஆப் பண்ணிடுவாங்கன்னு தெரிஞ்சு போய்டிச்சு அவங்களுக்கு. ரஜினி, ஐஸ், ரஹ்மான் அவங்கெல்லாம்  படத்தப் பத்தி சொல்ற மாதிரி விளம்பரப்படுத்தறாங்க. இன்னா ப்ளானிங்கு,  இன்னா ப்ளானிங்கு !!  ஞாயித்துக்கிழமை போட்டிருந்தானே ஒரு நிகழ்ச்சி, 'எந்திரன் வெளியீட்டுக் கொண்டாட்டங்கள்'ன்னு. பாலபிஷேகங்கற கேணத்தனம் எப்பவும் நடக்கறது ; இப்போ உடம்புல குத்தி தேரிழுக்கறதும், மொட்டை போட்டுக்கறதும், பச்சை குதிக்கறதும், பால்குடம் எடுக்கறதும்.. ஹ்ம் சொந்த மக, புருஷன்/பொண்டாட்டி, அப்பா/அம்மாவுக்காக இப்படி என்னிக்காச்சும் வேண்டியிருக்காங்களா? பார்க்கப் பார்க்க கோபம், எரிச்சல் தான் வந்துச்சு. எல்லாம் சரி, நிகழ்ச்சி முடியும்போது ரெண்டு லைன் போட்டாங்களே !! "நீங்களும் எந்திரனை கொண்டாடி விட்டீர்களா?  இது போல் கொண்டாட்டங்கள் இருந்தால் , DVD அனுப்பவும்"ன்னு. அடப்பாவிகளா, மிச்சமிருக்கற மக்களையும் சட்டையக் கிழிச்சுட்டுத் திரியச் சொல்றீங்களாடான்னு நெனச்சேன்.

ஆதி அவர்கள் சொன்னபடி //குறைந்த பட்சம் ‘நான், கடவுள் அல்ல, என் கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம், பூஜை, தீபாராதனை போன்ற நான்சென்ஸுகளையாவது கைவிடுங்கள்’ என ஒரு அறிக்கை விடலாம்தான்// மனிதநேயமிக்க ஒவ்வொருவரின் எண்ணமும் இதுவே !! அதக்கூடவா ரஜினி செய்ய மாட்டாரு?

இத்தோட நம்மள எல்லாம் விட்டுட்டா எப்படி? இன்னும் வரும்.. "எந்திரன் படப்பிடிப்புக் காட்சிகள்", "எந்திரன் பாடல்கள் உருவான விதம்", "எந்திரன் சந்தித்த சோதனைகள்", "எந்திரன்-நடிகர்கள் பார்வையில்", "எந்திரன் பற்றி ஹாலிவுட் நடிகர்கள்" , "எந்திரன்- தொழில்நுட்பம்",  "எந்திரன்-100 வது நாள்", "எந்திரன்-250 வது நாள்", "எந்திரன்-366 வது நாள்", "எந்திரன்-500 வது நாள்" --இருங்க கொஞ்சம்  தண்ணியக் குடிக்கறேன்.

சாமீ இதெல்லாம் எந்திரனப் பாத்துட்டு எழுதுனது இல்லீங்க; படத்துக்கு சம்மந்தம் இருந்தாலும் நடக்கற விஷயங்கள்ல இவங்களுக்கெல்லாம் கொஞ்சமே கொஞ்சமாச்சும் மனசாட்சிக்கே தப்புன்னு தோணாதாங்கற ஆதங்கம், வேறொன்னும் இல்லீங்க.

ஹ்ம்ம்.. என்ன பேசி என்ன? என்னை யாரும் எந்திரன் பாக்கக் கூட்டிட்டுப் போக மாட்டீங்கறான்களே !!
ஹ்ம்ம்..

5 comments:

  1. ரஜினிக்காக கண்டிப்பா படம் பாருங்க. இந்த டிவி கொடுமைகளை எழுத எண்ணினேன். கண்டபடி திட்டிவிடுவேன் என்பதால் எழுதவில்லை. :-))

    நன்றி.

    ReplyDelete
  2. போதும்பா எந்திரன் பில்டப்பு எந்த ப்ளோக்க தொறந்தாலும் இதேபுரணம் தான்..

    ReplyDelete
  3. எந்திரன் காய்ச்சல் அடங்க ரொம்ப நாள் ஆகும் போல! :(

    ReplyDelete
  4. @ஆதிமூலகிருஷ்ணன் : TV கொடுமை தாங்க, கொஞ்சம் பொங்கிட்டேன் :) நேத்திக்கு படம் பாத்தேங்க... நல்ல பொழுதுபோக்கான படம்.. நிறைய இடங்களில் கைதட்டி ரசித்தேன். என்ன ,சென்னை மாதிரி பெரிய ஊர்ல நல்ல தியேட்டர்ல பாத்திருந்தா அந்த சந்தோஷமே வேறங்க . ஹ்ம்ம் ... நன்றி.

    @mythees - Co........ool :)

    @ Balaji saravana -என்னதான் படத்துல அங்கே சரியில்லை, இப்படி இருந்திருக்கலாம், இது இல்லைன்னு ஆளாளுக்கு சொன்னாலும், எல்லாருக்குமே படம் பாக்கணும்ன்னு ஆசை, பாக்காம இருக்க மாட்டாங்க ; ஏன்னா 'ரஜினி' . காய்ச்சல் அடங்க நாள் ஆகும்தாங்க :)

    ReplyDelete
  5. The 15 Best Casinos in Vegas, NV - Mapyro
    Find the 양산 출장샵 BEST casino in Las 광주광역 출장마사지 Vegas, NV 안양 출장안마 for only $20 at Mapyro. A 아산 출장마사지 great choice of hotels and entertainment from 인천광역 출장안마 around the world.

    ReplyDelete

தட்டிக்கொடுத்தும் திட்டுக்கொடுத்தும்......