UK Visa... இதுக்கும் நமக்கும் (எனக்குங்க ! ) எப்பவுமே ஏழாம் பொருத்தந்தான். அந்த நாட்டுக்கு போவோம்ன்னு முடிவு பண்ணின நாள்ல இருந்து இன்னிக்கு, இந்த நிமிஷம் வரைக்கும் எப்ப அப்ளை பண்ணினாலும், எனக்காக யாரு அப்ளை பண்ணினாலும் எந்த தடங்களும் இல்லாம முடிஞ்சதே இல்லீங்க !! ராசி, கீசில எல்லாம் எப்பவும் நம்பிக்கை இருந்ததில்லைன்னாலும், ஒவ்வொரு தடவையும் எதாச்சும் நடந்ததுக்கு அப்புறம் யோசிச்சு பாத்தா செம காமடியாவும் ஒரு பாடம் கெடைக்கும்படியும் இருக்கும். ஒன்னு விடாம மெனக்கெட்டு நாப்பத்தஞ்சு பவுண்டு செலவு பண்ணி எல்லா டாக்குமெண்டும் அனுப்பி வெப்போம், அந்தப் புண்ணியவானுங்க லைட்டா அதுல எதாச்சும் லொள்ளு பண்ணுவாங்க.
அப்பாவுக்கு விசா வாங்க சென்னை போனாங்க தம்பியும் அப்பாவும். எல்லாம் பக்காவா இருக்கு.. ஆனாலும் விசா ஆபீஸ் உள்ள போன வேகத்துலேயே அப்பா வெளில வந்துட்டாரு.
இன்னிக்கு காத்தால நாலு மணி..
போன் அடிக்குது, தூங்கிட்டு இருக்கற நான் அரக்க பறக்க எடுத்து மறுபடி கூப்பிடறேன்னு சொல்லி வெச்சேன்.. அட பரவா இல்லையே, இந்நேரத்துக்கே அப்பா விசா டாக்குமெண்ட்ஸ் எல்லாம் குடுத்துட்டு வெளில வந்துட்டாங்களேன்னு நெனச்சுட்டே திருப்பி கூப்பிடறேன்..தம்பி !!
'சொல்லுடா, அதுக்குள்ள முடிச்சுட்டீங்களா, சூப்பர்டா. நான் பயந்துட்டே இருந்தேன், வழக்கம் போல எதாச்சும் சொதப்பிடுமோன்னு.. முடிஞ்சுதுல்ல, போயி சாப்ட்டுட்டு வாங்க மொதல்ல'
'இருடி, என்னப் பேசவே உட மாட்டியா? மச்சானோட பாஸ்போர்ட், விசா காப்பி மட்டும் பத்தாதாம், உன்னுதும் வேணுமாம். நான் பிரௌசிங் செண்டர்ல தாண்டி இருக்கேன், இப்பவே அனுப்பு, அனுப்பீட்டுப் போயி தூங்குடி. சீக்கிரம் அனுப்பு'
இப்ப என் முறை ..'இருடா, என்னப் பேசவே உட மாட்டியா? என்னோட விசா காப்பி எங்கிருக்குன்னு பாத்து அனுப்பறேன். அஞ்சு நிமிஷம் இரு, பறக்காதே; அதுதான் மூணு மணி வரைக்கும் டைம் இருக்கே ! '
கிழிஞ்சுது போ, இந்த தடவையுமா?ன்னு நெனச்சுட்டே மேலோட்டமாத் தேடித் பாத்தேன் . என்னோட பாஸ்போர்ட் எப்படியும் ஸ்கேன் பண்ணி வெச்சிருக்கேன், ஆனா விசா காப்பி எதுவும் இருக்கறா மாதிரி இல்ல. மறுபடி கொஞ்சம் சீரியஸா தேடித் பாத்தேன்.. அய்யய்யோ, இல்லையே ! இப்பத் தான் ஓங்கி ஒரு அறை விட்டா மாதிரி தூக்கம் தெளியுது. மறுபடியும் தம்பிக்கு போன் பண்ணி,
"டே ஒரு அரை மணி நேரம்டா, தேடித் பாத்துட்டு இருக்கேன், மறுபடி கூப்பிடறேன்."
மணி 5
வேற வழி இல்ல, ரங்கமணிய எழுப்பித்தான் ஆகணும் (வாங்கிக்கட்டிக்கறதுக்குத் தான் எவ்ளோ ஆசை !!).ரெண்டு பேருமா சேர்ந்து தேடினோம், தேடினோம், தேடிட்டே இருக்கோம்.. நானும் வர்றேன்னு குட்டிப் பையன் வேற எந்திரிச்சு, அவன் பங்குக்கு ரெண்டு மூணு பேப்பர் கிழிச்சுப்போட்டான். அவன சம்மதானப்படுத்தலாம்ன்னா, ஒரே அழுகை. ஸ்ஸ்ஸ், அப்பா ...
"சரி ஜெராக்ஸ் இல்லேன்னா பரவாயில்ல, பாஸ்போர்ட் எடு, ஸ்கேன் பண்ணி அனுப்பிருவோம்"
(பாஸ்போர்ட் இருந்தா மொதல்லயே ஸ்கேன் பண்ணியிருக்க மாட்டோமா?)
"பாஸ்போர்ட் இப்போ என்கிட்டே இல்லங்க. டிரைவிங் லைசென்ஸ் அப்ளிகேஷன் கூட வெச்சு அனுப்பியிருக்கேனே!!"
ப்ப்ப்ப் ...ப்யூஸ்
ட்ரிங் ங் ங் ங் ங் ங்
"என்னடி நான் எவ்ளோ நேரம் பிரௌசிங் சென்டர்ல உக்காந்துட்டு இருக்கறது?"
"இல்லடா, நீங்க ரூமுக்கு போங்க, நானே கூப்புடறேன்"
மணி 6
ஊர்ல தேடசொல்லுவோம்ன்னா, அம்மா வீட்ட இன்டெக்ஸ் பண்ணி வெச்ச கணக்கா சீக்கிரம் எடுத்துருவாங்க போ ன்னு நெனச்சிட்டு,
ட்ரிங் ட்ரிங்...
"என்ன சொல்லு"
"மா என்னோட விசா ஜெராக்ஸ் இருக்கான்னு தேடும்மா"
"உனக்கு பொழப்பே இல்லையா, எப்பப் பாரு இதே வேலைதான்"
"மா மா கொஞ்சம் பாரும்மா"
"இங்க இல்ல போ.."
"மா அந்த ப்ளூ பைல் ல?"
"பைலே இல்ல இங்க !!"
ட்ட்டட்ட்......டமால் !!
மணி 7
"ஏங்க, letting agency ல என்னோட விசா காப்பி ஒன்னு குடுத்தோம்ன்னு நெனைக்கிறேன்"
"ஏழு மணிக்கு எவன் அங்க உக்காந்திருக்கப் போறான் உனக்கு? எட்டரைக்குத் தான் வருவான்"
"கொஞ்சம் தேடுங்க அந்த ரூம்ல எதாச்சும் கவர்ல இருக்கும்"
..நற நற..
மணி 8
"ஹாஸ்பிடல் ரிசெப்ஷன் திறந்திருப்பாங்க, ரெஜிஸ்டர் பண்ணும்போது விசா காப்பி குடுத்ததா ஞாபகம் .. அங்க போன் பண்ணி கேட்டா?"
"சரி கேளு"
அரை மணி நேரம் அங்கேயும் தொங்கு தொங்குனு தொங்கிட்டு..
"இல்லேங்க, அங்கயும் இல்லையாமா...."
புஸ்ஸ்ஸ்ஸ்...
மணி 8.30
டிரைவிங் லைசன்சுக்கு அனுப்பி வெச்ச பாஸ்போர்ட் அந்த 'ஆப்'பீசுக்கு போயிருக்குமே, அவங்ககிட்ட கெஞ்சிக் கூத்தாடி ஒரு காப்பி ஸ்கேன் பண்ணி அனுப்ப சொல்லுவோம்னு யோசிச்சு(மூளை எப்புடி கவுட்டி கவுட்டியா வேலை செய்யுது பாருங்க ), ரங்கமணிக்கு சொல்லாம அலுங்காம ஒரு போன் அவங்களுக்கு.
Your application reference number please...
"____________"
"We have not received your application yet"
நாசமாப் போச்சு !!
மணி 9
நேரமாச்சு நேரமாச்சு Letting Agency தெறந்திருப்பான்
ஹலோ
(லெட்டிங் ஏஜென்சி விளம்பரம் ஓடுகிறது)
4 நிமிடங்களுக்குப் பிறகு ..
ஹலோ..
(லெட்டிங் ஏஜென்சி விளம்பரம் ஓடுகிறது)
ம்ஹூம், இது வேலைக்காவாது, நான் நேர்ல போயி பாத்துட்டு வர்றேங்க. குட்டியையும் கூட்டிட்டுப் போறேன்
ரங்கமணி கூவுகிறார், 'இங்க பாரு ஆய் போயி வெச்சுட்டான் '
அடங்கப்பா , நீயுமா? கண்ணக் கட்...டி..ருச்சே !!
9.30 , லெட்டிங் ஏஜென்சி
அங்க கேட்டா, இல்லைன்னு பதில் வருது. கண்டிப்பாக இங்க இருக்கணுமே, இந்த வீட்டுக்கு மாறும்போது எத வெச்சு சாமி என்னை நம்ம்ம்பி குடுத்தே? நொந்துகிட்டே நானே அவனோட பைல் வாங்கி தேடித் பாத்தேன். அப்புறம் அவன் என்னக் கேட்டான், போட்டோ ஒட்டி இருக்குமான்னு; ஆமா ஆமா ...ஆஹா, மகராசா அதே தான், எடுத்துட்டு வாப்பான்னேன். கொண்டு வந்து குடுத்தான்,மடிச்சு இருந்திச்சு.
பாருங்க, நான் அப்பவே சொன்னேன்ல இங்க கண்டிப்பா இருக்கும்ன்னு.
பிரிச்சுப் பாத்தா, என்னோடதில்ல, ரங்கமணியோட விசா காப்பி !
பனால்..யாராச்சும் காப்பாத்துங்களேன் !!
இருங்க இன்னும் முடியல..
மணி : இந்தூரு நேரம் முக்கியமில்லை , இந்திய நேரம்: விசா ஆபீஸ் முடிய இன்னும் அரை மணி நேரம்
கடைசி நம்பிக்கை, HSBC-ல கேட்டுப் பாப்போங்க, வெச்சிருந்தா நல்லது, வெச்சிருக்காட்டி ரொம்ப நல்லது, இருந்தா வாங்கிப்போம், இல்லேன்னா அப்பாவக் கெளம்ப சொல்லுவோம் (நான் பேசலை ஆறு மணி நேரத்து நீதி பேசுது )
அங்க போன உடனே வங்கி ஊழியர் ஒரு பொண்ணு என்கிட்டே வந்து என்ன வேணும்ன்னு கேட்டுச்சு -இப்படியெல்லாம் 'உடனே' எதுவும் நடக்காதான்னு நெனச்சுட்டே உக்காந்தேன். நீங்க வேற, நமக்குத்தான் இன்னிக்கு எல்லாமே எழரையாச்சே, உடனே வந்துட்டாலும் !! அந்தப் பொண்ணு வேற ஒரு கஸ்டமர பாத்துட்டு மெ.....துவா என் பக்கம் வந்த போது...
...கடவுளுக்கு இவ பாவம்ன்னு தோணுன இந்திய நேரம் மதியம் 2:45
அந்தப் பொண்ணு கிட்ட நான் என்னோட விசா காப்பி உங்க பைல்ல இருக்கான்னு பாத்து சொல்றீங்களான்னு கேக்க, அந்தப் பொண்ணுக்கு சந்தேகம். உன்னோட பாஸ்போர்ட் எங்கேன்னு கேக்க ஆரம்பிச்சிருச்சு. ஒரு நிமிஷம் நான் வாசலைப் பாத்தேன், அவசரத்துல மாறி போலீஸ் ஸ்டேஷன் வந்துட்டமான்னு நெனச்சுட்டே என்சோகக் கதைய சொன்னேன். என்ன தோணிச்சோ என்னம்மோ, என்னோட டெபிட் கார்ட் வாங்கி கடக்கு முடக்குன்னு என்னம்மோ கம்ப்யூட்டர்ல தட்டிச்சு, சொய்ங்-என்னோட விசா பிரிண்ட் ஆகிருச்சு !!
நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஒடுஒடு
அலோ, அப்பா நான் விசா வாங்கிட்டேன் (என்னம்மோ மொதல் தடவை வாங்கின மாதிரி) இப்பவே ஸ்கேன் பண்ணி ஈமெயில் பண்றேன், பிரிண்ட் எடுத்து குடுத்துடுங்க ...
"இன்னும் அஞ்சே நிமிஷம் தான இருக்கு"
தோ தோ, அனுபிட்டே இருக்கேன்..
வீட்டுக்குப் போனா நேரமாகும்ன்னு, வழியில டீக்கட ஒண்ணுல பூந்து(இந்த ஊரு டீக்கடைல அதுக்கெல்லாம் வசதி இருக்கு பாருங்க !!) ஸ்கேன் பண்ணி அனுப்பியாச்!! அப்பாஆஆஆஆஆடி. எங்கப்பா மூளைக்காரர் !! ஆபீஸ் மூடினா தானே உள்ள போக உட மாட்டாங்க, உள்ளயே நின்னுகிட்டா? ஏற்கனவே பிரௌசிங் சென்டர்ல இருந்த என் தம்பி கில்லி மாதிரி பிரிண்ட் எடுத்து அப்பாகிட்ட குடுத்துட்டான்..
சர்ரியா, மூணு மணி ..
அப்பா தேவையான எல்லா டாக்குமெண்டுகளையும் எடுத்துட்டு உள்ள போயி ஆபீஸ்ல குடுத்துட்டார்.
ஒரு பாஸ்போர்ட்டை அனுப்பிட்டு நான் படும் பாடு இருக்கிறதே !! தூது வந்த புறாவை வறுத்துத் தின்ற புலிகேசிய விட மகா மட்டமா இருக்குங்க !! எல்லாம் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்து பொறுமையா, என்னோட சுட்டு விரல என்னையே பாத்து நீட்டி கேட்டேன்..
"டிரைவிங் லைசென்ஸ் உனக்கு தேவையா?"
டிஸ்கி: இத்தன ட்ராஜெடி இருந்திச்சே என் கதைல, யாரக் கொல்லப் போறேன்னு கேக்கறீங்களா? இன்னிக்கு காலைல இருந்து மதியானத்து வரைக்கும் இருந்த பரபரப்பு, கோபம், ஆத்திரம், இதுக்கெல்லாம் கொலைவெறியோட யாரையாச்சும் "உன்னக் கொல்லாம விட மாட்டேன்" ன்னு சொல்லிட்டே தொரத்தனும் போல இருந்திச்சு, அதனால தாங்க .. .. ஹி ஹி...
:-)
ReplyDelete//"டிரைவிங் லைசென்ஸ் உனக்கு தேவையா?"//
ReplyDeleteஅதானே?
ஓடுங்க ஓடுங்க.. நிக்காம ஓடுங்க.. அது நம்மள கொல்லத்தான் வருது :))
ReplyDeleteநகைச்சுவையா பேசுறது ஈசி,எழுதுறது ரொம்ப கஷ்டம். நீங்க கலக்கிட்டீங்க..!
ReplyDeleteநல்லா சிரிச்சேன், என்ன பண்ண, ஹி ஹி உங்களையெல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு.
Fantastic.. Keep writing!!!! - Ram
ReplyDeletePradee, Ungalukku UK visa, enakku Swiss Visa.. Enga appa next friday Inga varathukku innum Visa ve kedaikala.. So intha nochu business ela consulate la yum nadakuthu.. ;)
ReplyDeleteSuperb narration pa!! :)
@யாத்ரீகன்- நன்றிங்க
ReplyDelete@ கொல்லான் - அதே தாங்க :-)
@கார்க்கி-எப்படியோ தப்பிச்சுட்டேன்
@Phantom Mohan
என்னிக்கு ஊர விட்டுட்டு இங்க வந்தோமோ, அப்பிருந்தே பாவந்தாங்க :-)
@ரமனா -நன்றிங்க அண்ணா
@Rohini
முகவரில வருமே..
"ஒரே நிழல் ஒரே விசா நீ கொண்டுவா நீ கொண்டுவா"ன்னு பாட வேண்டியது தான் :)
அப்பாவுக்கு சீக்கிரம் விசா கிடைக்க வாழ்த்துக்கள்.
படிச்சு லூசு மாதிரி சிரிச்சேன் , பிரெண்ட் மொறைக்குற அளவுக்கு
ReplyDeleteநானும் இன்னிக்குத்தான் டிரைவிங் லைசென்ஸ்-க்காக பாஸ்போட் குடுத்திட்டு வந்தேன்...
ReplyDeleteவீட்டில் சும்மாதானே இருக்கிறோம்-ன்னு லைப்ரரி-யில மெம்பர் ஆகலாம்ன்னு போனா, where is your passport?-ன்னு கேட்டு திருப்பி அனுப்பிட்டாங்க...
இன்னும் என்னன்ன நடக்கப் போகுதோ?
சிறந்த நகைச்சுவை நடை.
ReplyDeleteஇறுதி வரையில் விறுவிறுப்புக் குறையாமல் கொண்டு சென்றிருக்கிறீர்கள்.
என்ன ஒன்று?
இதெல்லாம் நிஜத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் என்பதாலேயே சிரிக்க சங்கடமாய் இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
@மதார் :-)
ReplyDelete@பிரேமா மகள் -என்னை மாதிரியே சமத்து !!
@+Ve Anthony Muthu
பரவா இல்லைங்க, சிரிக்கலாம் :) ரசித்தமைக்கு நன்றி !!
பிரதீபா என்ற நமக்கு எல்லாம் இந்த மாதிரி அனுபவம் நிறைய நடக்கும் போல.
ReplyDeleteஎனக்கு என்னோட குழந்தையோட பாஸ் போர்டுக்கு தேடி தேடி அலைஞ்சி இதுபோல என் கணவர்கிட்ட திட்டு வாங்கி அனுப்பின அனுபவம் நிறைய உண்டு போங்க.
ரொம்ப சிரிச்சேன்.நிறைவு இருந்தது.
பாவம் .. உங்க அப்பா, தம்பி மற்றும் உங்க அத்தான்...இப்படியா மக்களை அலைய விடறது?
ReplyDelete@siragu
ReplyDeleteஎனக்கு வகைக்கு ஒண்ணா நெறைய அனுபவம் இருக்குங்க !! இது சும்மா சாம்பிள். நான் என்னோட நட்பு வட்டாரம் கிட்ட சொல்லுவேன்.. எதாச்சும் சந்தேகம்ன்னா என்கிட்டே கேளுங்க, என்ன பண்ணினா கெடைக்கும்ன்னு சொல்றேனோ இல்லையோ, எந்த வழில போனா கெடைக்காதுன்னு கண்டிப்பா சொல்றேன்-ன்னு ;) அனுபவம் அனுபவம் !!
@பாலகுமார் - பிரச்சனை எல்லாமே உங்க மாப்பிள்ளையால வந்தது தான்.. மொதல்லையே சொல்லியிருந்தா நாங்க அலார்டா இருந்திருப்போம்ல.
என்னா ஸ்பீடு எழுத்துல! நீங்க எங்களுக்காக இரு ஸ்பெஷல் க்ரைம் ஸ்டோரி ஒண்ணு ட்ரை பண்ணுங்களேன்.. ப்ளீஸ்..
ReplyDeleteநல்லாருக்கே இது.....
ReplyDelete@பரிசல்
ReplyDeleteஅன்னிக்கு நடந்தது அத்தன ஸ்பீடுங்க, அப்படியே எழுத்துல வந்திடுச்சுங்க, அவ்ளோதான். நன்றிங்க..
க்ரைம் ஸ்டோரி ஒண்ணு??- ஹி ஹி.. எழுதலைன்னாலும் கண்டிப்பா முயற்சியாச்சும் பண்றேங்க.
@அஹமது இர்ஷாத்
நன்றிங்க !!
Romba pramaatham Deepa... Ezhuthum thiramaya nalla veliyala kondu vara ithu oru sirantha seyal.
ReplyDeleteThodarnthu eluguthavum....
Anbuda,
Ravi Anna
@ravi
ReplyDeleteஅண்ணா, ரொம்ப நன்றி, உங்க பின்னூட்டத்திற்கும், உற்சாகப்படுத்தியமைக்கும்.
ஐயோ chance-e இல்ல! அப்டியே என்னை மாதிரியே இருக்க! :)
ReplyDeleteshabba.. paaavam neenga... nalla nadai
ReplyDelete@Kay - இதுலயுமா நமக்குள்ள resemblance?
ReplyDelete@LK
என்னங்க பண்றது.. நாய் வேஷம் போட்டா குலைக்கனும்ன்கற கதையா ஆகிப் போச்சுங்க !! இங்க வரனும்ன்னா இவங்க கேக்கற டாகுமென்ட் எல்லாம் குடுத்து தானே ஆகணும் !!
யப்பா......
ReplyDeleteஇவ்ளோ கூட சரளமா நகைச்சுவை எழுத முடியுமா என்ன... நான் எழுதினது எல்லாம் கூட ஜூஜூபி தான் போல இருக்கு (என்னோட வலைப்பதிவுகளை படித்து விட்டு சொல்லுங்களேன் - www.edakumadaku.blogspot.com & www.jokkiri.blogspot.com).
அட்டகாசமான, மிக நீளமான, ஆனாலும் சுவை குன்றாத நகைச்சுவை சரளமான ஒரு பதிவு...
அப்ப என்னோட பாஸ்போர்ட் புக்க.. எங்க வச்சேன்...ஐய்யய்யோ..
ReplyDelete@R.Gopi
ReplyDeleteநன்றிங்க!! கண்டிப்பா உங்க பதிவுகள் படிச்சிட்டு சொல்றேங்க !!
@ ksurendran
ஐயோ, சாமி, மறுபடியும் இப்படி ஒரு கதி யாருக்கும் வரக் கூடாதுங்க.. அதனால பாஸ்போர்ட் ஸ்கேன் பண்ணி வெச்சிக்குங்க, ஓரிஜினல ரொம்ப பத்திரமா பூட்டி வெச்சிக்குங்க. இம்மிக்ரேஷன் ஆபீசர் கேட்டாக் கூட குடுத்துறாதீங்க :))
is this y blood same blood type storyyaa
ReplyDeletekathai nallavea irrunthuchu ithoda next part eppo poduveenga
என் மகன் பாலாஜிக்கு லண்டனுக்கு விசா எடுக்கும்போது நிகழ்ந்த அனுபவங்களை எழுதலாம் என்று இருந்தேன். இப்போது அம்முடிவைக் கைவிட்டுவிட்டேன். நீங்கள் எழுதிய அளவுக்கு அது சுவைபட இருக்குமா என்ற சந்தேகமே காரணம்.
ReplyDelete@vinu நன்றிங்க !
ReplyDeleteஅடுத்த பகுதியா? அதுக்குன்னு இனிமே வேற யாரையாச்சும் தாங்க நான் லண்டனுக்கு மறுபடி வர சொல்லணும், இல்லேன்னா இன்னும் வேற ஏதாச்சியும் நான் தொலைச்சிட்டு தேடனும் :) .
@ லதானந்த் நன்றிங்க !
நீங்களும் கண்டிப்பா எழுதுங்க, ஒவ்வொருவருக்கும் தனித்தனியா கெடச்ச அனுபவம் தனி சுவை தாங்க ! எப்படி இருக்குன்னு எல்லாரும் படிக்கட்டுமே ...
:))
ReplyDeleteஏழுகடல் தாண்டி, ஏழு மலைத் தாண்டி போனால் தான் முடியும் என்ற ரீதியில் எங்களை பயமுறுத்தினார்கள்... வலைப்பூ-வை உருவாக்க வேண்டும் என துவங்கியப்போது. இருந்தபோதிலும் மிக எளிது என நம்பிக்கையூட்டிய "நண்பேன்டா"களின் உதவியால் இன்று bharathbharathi.blogspot.com என்ற தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறோம்.
ReplyDeleteதட்டுத்தடுமாறி "தத்தகா, பித்தகா" என்று இரண்டு அடிகள் வைத்து விட்டோம். இன்னும் சரியாக நடைப்பயில வரவில்லை, எப்படியாயினும்; உங்கள் உதவி அதிகம் தேவைப்படுகிறது. மேலும் ஆலோசனைகளைத் தாருங்கள்.
இந்த வலைப்பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்க. இது சின்னஞ்சிறு மனிதர்களின் உலகம். தவறுகளை புறக்கணித்து வாழ்த்துங்கள்.. கருத்துரைகளை ஆவலாய் எதிர் நோக்குகிறோம்..
வந்து பாருங்கள் bharathbharathi.blogspot.com
உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...
நன்றி..
அன்புடன்...
பாரத்பாரதி-க்காக
எஸ்.பாரத்,
மேட்டுப்பாளையம்...
fabulous! un vayala kadhai keta madhiri iruku!
ReplyDeleteவாவ், வலைச்சரத்தில் எஸ்.கே சார் அறிமுகப்படுத்தினதால் இங்கே வந்து பார்த்தேன். இப்போது ஃபொலோவர் ஆகிட்டேன். இன்னும் என் சிரிப்பை அடக்க முடியவில்லை.
ReplyDelete@ எம்.எம்.அப்துல்லா - என்னண்ணா எழுதறது மறந்தே போயிடுச்சா உங்களுக்கு?
ReplyDelete@ பாரத்... பாரதி... - உங்கள் வலைப்பூவை முதலிலிருந்தே நான் தொடர்ந்து வருகிறேன். நல்ல படைப்புகள். படைப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@ RT - கதைய சொன்னா கூத்து, யாரையாச்சும் போட்டு சாத்து, ஏ டண்டணக்கா, ஏ டணக்குடக்கா :)
@அனாமிகா துவாரகன் - என்னடா சுனாமி இன்னும் நம்ம கடைப்பக்கம் வரவே இல்லையேன்னு நெனச்சேன், ஒரு வழியா வந்துட்டீங்க. நன்றி :)
Nalla irukku madam!! really enjoyed. (atuththavaa thindaadina kadhai yevloo nalla irukku)..:)
ReplyDelete//""மா அந்த ப்ளூ பைல் ல?""பைலே இல்ல இங்க !!"// in vadivel stylela 'Perumaalukku ponney illainga' ..:)
நன்றிங்க தக்குடு.
ReplyDeleteம்ம்..பேசாம அடுத்து யாரையாச்சும் விசா வாங்க அனுப்பினா என்ன? அய்யய்யோ வேண்டாஞ்சாமீ.. :)
செம டென்ஷனோட கலகலப்பு :-)))))
ReplyDelete