நாளை மறுநாள்
வாரக் கடைசியில் கண்டிப்பாய்
அடுத்த வாரம் நிச்சயமாய்
திரும்பிப் பார்த்தேன்
திரும்பாமலே காலம்
நாட்களாய் வாரமாய்
இறுதியில் வருடமாய்
பெரும்பாலும் வெறுமையாய்
ஓடியே போனது
சோம்பலே சொந்தமென்றுவிட்டு
கற்பனைத் திறனா
கொக்கலித்துவிட்டு
என்தமிழ் காதலை
திட்டித் தீர்த்துவிட்டு
வேலை அதிகம்
முகில் தூங்கலை
ரைம்ஸ் கிளாஸ்
தலைவலி சளி?
உச்சத்தின் உச்சமாய்
'நல்லா ஆரம்பிக்கனுமே'
எனக்கே பிடிக்கவில்லை
நானுரைக்கும் பொய்கள்
(கிழிக்கவே தொடங்கலை
அதற்குளொரு கவலை
கத்தி மொன்னைஎன்று :-)
எதுவோ இன்று
உந்தியது என்று
தொடக்கத்தை தொடங்கினேன்
சிந்தித்த சிலதுகளை
சிரித்துவிட்ட பலதுகளை
வழுக்கிவிட்ட வெண்பனி
வெள்ளையர் காதல்
ஈஸ்ட்ஹேம் ஈஸ்வரர்
தீயத்துவிட்ட இட்லி
திமிர்பிடித்த பூனை
மிகரசித்த வீடியோ
மிகப்பிடித்த பொழுதுகள்
எழுதவா பொருளில்லை
அத்தனைக்கும் மேல்
இதோ என் கைகளில்
'கார்முகில்'
கவிதைஎன்று
கவினுருவாய்
சிரித்துக்கொண்டு
சிறுமுத்தாய்
எழுதம்மா எழுது !!
எழுத வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் உந்திய என் கார்முகில், எழுத்தாளர்கள் பரிசல், கார்க்கி, குசும்பன்,ஆதி, அப்துல்லா, அனுஜன்யா, நர்சிம், இன்னும் எனக்கு ஊற்று கொடுத்த எனது அன்பிற்குரிய எழுத்தாளர்கள் அனைவருக்கும் இந்த வலைப்பூ வணக்கத்துடனும் வாழ்த்துக்களுடனும் சமர்ப்பணம்.
இனி வரும் பதிவுகள் அனைத்தும் என் டைரியின் பக்கங்கள், எனக்கு நானே முதல் ரசிகையாய் !! (அலெர்ட் ஆகி ஓடிராதீங்க ப்ளீஸ் !!)