நாளை மறுநாள்
வாரக் கடைசியில் கண்டிப்பாய்
அடுத்த வாரம் நிச்சயமாய்
திரும்பிப் பார்த்தேன்
திரும்பாமலே காலம்
நாட்களாய் வாரமாய்
இறுதியில் வருடமாய்
பெரும்பாலும் வெறுமையாய்
ஓடியே போனது
சோம்பலே சொந்தமென்றுவிட்டு
கற்பனைத் திறனா
கொக்கலித்துவிட்டு
என்தமிழ் காதலை
திட்டித் தீர்த்துவிட்டு
வேலை அதிகம்
முகில் தூங்கலை
ரைம்ஸ் கிளாஸ்
தலைவலி சளி?
உச்சத்தின் உச்சமாய்
'நல்லா ஆரம்பிக்கனுமே'
எனக்கே பிடிக்கவில்லை
நானுரைக்கும் பொய்கள்
(கிழிக்கவே தொடங்கலை
அதற்குளொரு கவலை
கத்தி மொன்னைஎன்று :-)
எதுவோ இன்று
உந்தியது என்று
தொடக்கத்தை தொடங்கினேன்
சிந்தித்த சிலதுகளை
சிரித்துவிட்ட பலதுகளை
வழுக்கிவிட்ட வெண்பனி
வெள்ளையர் காதல்
ஈஸ்ட்ஹேம் ஈஸ்வரர்
தீயத்துவிட்ட இட்லி
திமிர்பிடித்த பூனை
மிகரசித்த வீடியோ
மிகப்பிடித்த பொழுதுகள்
எழுதவா பொருளில்லை
அத்தனைக்கும் மேல்
இதோ என் கைகளில்
'கார்முகில்'
கவிதைஎன்று
கவினுருவாய்
சிரித்துக்கொண்டு
சிறுமுத்தாய்
எழுதம்மா எழுது !!
எழுத வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் உந்திய என் கார்முகில், எழுத்தாளர்கள் பரிசல், கார்க்கி, குசும்பன்,ஆதி, அப்துல்லா, அனுஜன்யா, நர்சிம், இன்னும் எனக்கு ஊற்று கொடுத்த எனது அன்பிற்குரிய எழுத்தாளர்கள் அனைவருக்கும் இந்த வலைப்பூ வணக்கத்துடனும் வாழ்த்துக்களுடனும் சமர்ப்பணம்.
இனி வரும் பதிவுகள் அனைத்தும் என் டைரியின் பக்கங்கள், எனக்கு நானே முதல் ரசிகையாய் !! (அலெர்ட் ஆகி ஓடிராதீங்க ப்ளீஸ் !!)
//எழுத வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் உந்திய என் கார்முகில், எழுத்தாளர்கள் பரிசல், கார்க்கி, குசும்பன், அப்துல்லா, அனுஜன்யா, நர்சிம் அனைவருக்கும் இந்த வலைப்பூ வணக்கத்துடனும் வாழ்த்துக்களுடனும் சமர்ப்பணம்.
ReplyDelete//
பரலோகத்தில் இருக்கும் பரம பிதாவே இந்த பாவிகளை இரட்ச்சியும்! ஆமென்!
வாழ்த்துக்கள்!
ஹலோ.. இந்த இத்துப் போன எயித்தாளர்கள் வரிசையில் என்னையும் சேர்க்கலாமா?
ReplyDeleteசரி..முதல் எடுத்தவிடனே திட்ட கூடாது
வாழ்த்துகள்... தங்களின் பாதை சிங்கப்பாதையா பூப்பாதையா?
அதாங்க... என்ன மாதிரி மொக்கையை இலக்கியச்சுவையோடு எழுதப் போறீங்களா? இல்லை மத்தவங்க மாதிரி இலக்கியத்த மொக்கையா எழுத போறீங்களா???????
@ குசும்பன்
ReplyDeleteஹஹா ....மிக்க நன்றி குசும்பன் !! படித்தமைக்கும், சகித்தமைக்கும், முதல் பின்னூட்டமிட்டதற்க்கும். அதென்ன படக்குன்னு அப்டி சொல்லிட்டீங்க? நான் மட்டும் இல்லாம நெறைய பேரு உங்க எல்லாராலயும் எழுத வந்திருக்காங்க..
@ கார்க்கி
ரொம்ப ரொம்ப சந்தோஷம் கார்க்கி, இந்த சின்ன பிளாட்பாரம் கடைக்கு வந்ததற்கு..என்னோட அறிமுகத்துல நான் 'கார்க்கியோட அக்கா' ன்னு ஒரு வரி சேர்த்தேன், யாரோ அழிச்சுப்புட்டாங்க..:-) ஆனா நீங்க சொல்ற இலக்கியம் எல்லாம் எங்கம்மா நான் சின்ன புள்ளையா இருக்கும்போது தான் குடுத்தாங்க, இங்க அது எங்க கெடைக்கும்ன்னு தெரியலைங்க..கெடச்சுதுன்னா அந்த சுவையோட கண்டிப்பா எழுதறேங்க !!(அட லூசே, அது லேகியம்)
மேற்கொண்டு போகலாமா வேண்டாமான்னு யாருமே சொல்ல மாட்டேங்கறீங்களே?(இத்தோட நிப்பாட்டுன்னு சொன்னா மட்டும் என்னம்மோ கேட்டுர்ற மாதிரி !! ஹி ஹி )
களத்தல இறங்கிட்டீங்க.. கலக்குங்க.. இனி வரும் பதிவுகள் சூடாகவும் சுவையாகவும் வர வாழ்த்துக்கள் பிரதீபா!
ReplyDeleteபிரதீபா 'பேசு'கிறேன்.. நல்ல தலைப்பு தான்
suuper patu...enjoyed reading it. Din't want write in tamil and commit mistakes.
ReplyDelete@பாலகுமார்
ReplyDeleteவாங்க அண்ணா.. வாழ்த்துகளுக்கு நன்றி!! இனிமே பேச்ச குறைக்கனும்ன்னு முடிவு பண்ணினேன், அதனால எழுத ஆரம்பிச்சுட்டேன்(அதுக்கு நீ பேசியே இருக்கலாம்-ங்கறீங்களா?) :-)
@காயத்ரி
தேங்க்ஸ் .. நீ எனக்கு தனியா மெயில்-ல என்னை புகழ்ந்து ஒரு நாலு வரி எழுதுனியே, அதை இங்கே போட்டிருக்கலாம்.ஹி ஹி
//பேச்ச குறைக்கனும்ன்னு முடிவு பண்ணினேன்//
ReplyDeleteபேச்ச குறைக்கற ஆள பாரு.
@பாலகுமார்
ReplyDeleteஅண்ணா ....... பப்ளிக் பப்ளிக்.. :-)
வாழ்த்துக்கள்! நிறைய எழுதுங்கள்!
ReplyDelete@ தமிழ் பிரியன்
ReplyDeleteஉற்சாகம் ஊட்டியதற்கு ரொம்ப நன்றிங்க..
நன்றாக வளர வாழ்த்துக்கள்.
ReplyDelete@மசக்கவுண்டன்
ReplyDeleteரொம்ப நன்றிங்க உங்க வாழ்த்துக்களுக்கு. பேரு ரொம்ப வித்யாசமா இருக்குங்க :)
வாழ்த்துக்கள்...
ReplyDelete@க.பாலாசி
ReplyDeleteநன்றிங்க.