Thursday 20 May 2010

வாழ்க்கையை சலித்துக்கொள்(ல்)பவர்களுக்கு...

எங்க அத்தை ஒருத்தங்க சொன்ன கதை இது ...

வண்டியில் போனவன் விமானத்தில் போறவனை பாத்து நெனச்சானாம், என்னடா நம்மால அப்படி போக முடியலையேன்னு ; அவன் முன்னாடி ஒருத்தன் நடந்து போய்கிட்டிருந்தானாம். வண்டியில போற அளவுக்காச்சும் கடவுள் வெச்சிருக்காரே பரவாயில்லைன்னு வேலைய பாக்க போனானாம். நடந்து போறவன் கார்ல போனவன பாத்து நெனச்சானாம், நமக்கு அப்படி முடியலையேன்னு ; அப்போ காலே இல்லாத ஒருத்தர் இன்னொருத்தர் உதவியோட ரோடு கிராஸ் பண்றத பாத்தானாம். நடந்து போற அளவுக்காச்சும் கடவுள் நம்மள வெச்சிருக்காரே சந்தோஷமப்பான்னு நெனச்சிட்டு போயிட்டானாம்.



இந்த வீடியோ பார்க்கும்போது எனக்கு கடவுள் அருளிய வாழ்க்கை திருப்திகரமாகத் தோன்றியது; நல்லா இருந்தும் என்னத்த சாதிச்சு கிழிச்சிருக்கோம் என்றும் தோன்றியது.ஆனாலும் நிக் சொல்வது போல நானும் சொல்கிறேன், I Love my life.

பார்த்து முடித்தபின் நமக்குள் ஏதோ ஒரு மாற்றம் நிகழும் என்பது உறுதி !!

3 comments:

  1. கார்க்கி said...
    :))
    //

    கார்க்கி பாரேன் இந்த பொண்ணு என்னமா தத்துவம் எல்லாம் சொல்லுதுன்னு:)))

    ReplyDelete
  2. "பிரதீபா,உனக்கு இது தேவையா?" வடிவேல் மாதிரி என்னையே நான் விரல் நீட்டி கேட்டுக்கறேன்..
    :-)

    ReplyDelete

தட்டிக்கொடுத்தும் திட்டுக்கொடுத்தும்......