Monday, 21 February 2011

மலேசியா வாசுதேவன் - திரும்பாத பூங்காற்றுக்கு இறுதி மரியாதை

இசையை நேசிக்காத மனிதர்கள் யாரும் இருக்க முடியாது. திரையில் அது கதாநாயகர்களின் வெளிப்பாடாக இருந்தாலும் இசை மட்டுமே ஒரு பாடகரின் முகவரி. சந்தோஷத்தை இரட்டிப்பாக்கவும், சோகத்தை இன்னும் ஆழப்படுத்தவும் இசையால், பாடகரின் குரலினால் மட்டும் முடியும் அதிசயம்; பகிரப்படும் மகிழ்ச்சி, இயற்கையின் அழகு, தாய்மை, கல்லூரி நாட்களின் குதூகலம், வெளிப்படுத்தாத காதலின் சோகம் இப்படி ஒவ்வொரு உணர்வும் தன் குரலாய்  மனிதன் கேட்பதே பாடல்களின், பாடகர்களின் வாயிலாகத் தான்.


முதல் மரியாதை -என் நினைவு தெரிந்து நான் ரசித்த படங்களில் கதாப்பாத்திரத்தோடு மிக ஒன்றிய பாடல்கள் கொண்டது. படத்தின் வெற்றிக்கு சிவாஜி எவ்வளவு காரணமோ, அவ்வளவு இசையும் காரணம். மலேசியா வாசுதேவன் என்ற இசை அருவியின் குரல் தான் எத்தனை உணர்வோட்டமாய், வருத்தமாய், சந்தோஷமாய் ஒவ்வொரு இடத்திலும் அதற்க்கு ஏற்றார் போல் எத்தனை பொருத்தமாய் !! அது மட்டுமல்லாமல் கண்களை இடுக்கிப் பார்த்தே வில்லன் பரிமாணமும் எடுத்தவர். ஏறத்தாழ 8000 பாடல்களும், 85 படங்களில் வில்லனாகவும் நமக்கு திரைவிருந்து கொடுத்துள்ளார். பிறந்தது மலேசியாவில் என்றாலும், தமிழுக்கு இவர் கிடைத்தது இசை ரசிகர்களின் வரம் என்பேன். 1980, 1990 ஆண்டுகளில் இவர் பாடிய பாடல்களை யாரும் மறக்க முடியாது.

கோடைக் காலக் காற்றே ...


ஆகாய கங்கை....


பொதுவாக எம்மனசு தங்கம்....


ஆசை நூறு வகை....


என்னம்மா கண்ணு.....


இது போன்ற பாடல்கள் பாடல் காட்சிகளையும் தாண்டி, பல வருடங்களையும் கடந்து மலேசியா வாசுதேவனின் குரலுக்காகவே சூப்பர் ஹிட்டானைவை. ஸ்வர்ணலதா என்ற தேனூற்று வற்றியதன் அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில், இதோ இன்னுமொரு இழப்பு. இசைக்கலைஞன் மரித்தாலும் அவர் கொடுத்த இசை மறப்பதில்லை. திரும்பாத அந்த இனிய பூங்காற்றுக்கு இதய அஞ்சலி.
17 comments:

 1. எனது அஞ்சலிகளும்

  ReplyDelete
 2. S Maharajan - வருகைக்கு நன்றி !

  ReplyDelete
 3. பூவே இளைய பூவே என் ஆல்டைம் ஃபேவரைட்..

  எனது அஞ்சலிகளும்...

  ReplyDelete
 4. @பரிசல்: சட்டென்று மனதில் தோன்றிய பாடல்களை மட்டும் சேர்த்தேன். யோசித்துப் பார்த்தால் நீங்கள் சொன்ன பூவே இளைய பூவே, கட்டி வெச்சுக்கோ , ஒரு தங்கரதத்தில், வாவா வசந்தமே..இன்னும் நிறைய அருமையான பாடல்கள்.. ப்ச். அவர் இறந்த பிறகு மேலும் வருத்தம் தருகிறது அவரின் சோக கீதங்கள்.

  ReplyDelete
 5. எனது மனம் கவர்ந்த பாடகருக்கு... அஞ்சலி...

  ReplyDelete
 6. கொல்லான் :( இரண்டு நாட்களாக அவர் பாடல்களே கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
 7. மலேசியா வாசுதேவன் இசையால் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்!

  ReplyDelete
 8. @ வால்பையன் : ஆமாங்க .

  ReplyDelete
 9. அட.. ரெண்டுநாளா வாசுவோட எல்லாப்பாடல்களையும் முனுமுனுத்துகிட்டிருக்கேன்.. இந்த நிமிடம் அவர்பாடின பிடித்தப் பாடல்களை டவுண்லோடு போட்டிட்டிருக்கேன்.. அட் த சேம் டைம் உங்களுக்கு கமெண்டும் போடுறேன்.. கோ..இன்ஸிடன்ட்..

  ReplyDelete
 10. @க.பாலாசி : நன்றிங்க.

  ReplyDelete
 11. அப்பாவி தங்கமணி: ஆமாம் அக்கா

  ReplyDelete
 12. உங்கள் பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
  http://blogintamil.blogspot.com/2011/03/1_15.html

  ReplyDelete
 13. @ Pranavam Ravikumar : Thanks for visiting

  @எஸ்.கே : நல்லதொரு வலைப்பூவில் சிறந்தொரு அறிமுகம் . மிக்க நன்றி. தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்துகிறது.

  ReplyDelete
 14. ரொம்ப லேட்டா வந்திட்டேன் போல

  ReplyDelete
 15. @ சி.பி.செந்தில்குமார் : பரவா இல்லைங்க.. அவருதான் லேட் ஆயட்டாரே.
  வருகைக்கு நன்றி.

  ReplyDelete

தட்டிக்கொடுத்தும் திட்டுக்கொடுத்தும்......