இசையை நேசிக்காத மனிதர்கள் யாரும் இருக்க முடியாது. திரையில் அது கதாநாயகர்களின் வெளிப்பாடாக இருந்தாலும் இசை மட்டுமே ஒரு பாடகரின் முகவரி. சந்தோஷத்தை இரட்டிப்பாக்கவும், சோகத்தை இன்னும் ஆழப்படுத்தவும் இசையால், பாடகரின் குரலினால் மட்டும் முடியும் அதிசயம்; பகிரப்படும் மகிழ்ச்சி, இயற்கையின் அழகு, தாய்மை, கல்லூரி நாட்களின் குதூகலம், வெளிப்படுத்தாத காதலின் சோகம் இப்படி ஒவ்வொரு உணர்வும் தன் குரலாய் மனிதன் கேட்பதே பாடல்களின், பாடகர்களின் வாயிலாகத் தான்.

முதல் மரியாதை -என் நினைவு தெரிந்து நான் ரசித்த படங்களில் கதாப்பாத்திரத்தோடு மிக ஒன்றிய பாடல்கள் கொண்டது. படத்தின் வெற்றிக்கு சிவாஜி எவ்வளவு காரணமோ, அவ்வளவு இசையும் காரணம். மலேசியா வாசுதேவன் என்ற இசை அருவியின் குரல் தான் எத்தனை உணர்வோட்டமாய், வருத்தமாய், சந்தோஷமாய் ஒவ்வொரு இடத்திலும் அதற்க்கு ஏற்றார் போல் எத்தனை பொருத்தமாய் !! அது மட்டுமல்லாமல் கண்களை இடுக்கிப் பார்த்தே வில்லன் பரிமாணமும் எடுத்தவர். ஏறத்தாழ 8000 பாடல்களும், 85 படங்களில் வில்லனாகவும் நமக்கு திரைவிருந்து கொடுத்துள்ளார். பிறந்தது மலேசியாவில் என்றாலும், தமிழுக்கு இவர் கிடைத்தது இசை ரசிகர்களின் வரம் என்பேன். 1980, 1990 ஆண்டுகளில் இவர் பாடிய பாடல்களை யாரும் மறக்க முடியாது.
கோடைக் காலக் காற்றே ...
ஆகாய கங்கை....
பொதுவாக எம்மனசு தங்கம்....
ஆசை நூறு வகை....
என்னம்மா கண்ணு.....
இது போன்ற பாடல்கள் பாடல் காட்சிகளையும் தாண்டி, பல வருடங்களையும் கடந்து மலேசியா வாசுதேவனின் குரலுக்காகவே சூப்பர் ஹிட்டானைவை. ஸ்வர்ணலதா என்ற தேனூற்று வற்றியதன் அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில், இதோ இன்னுமொரு இழப்பு. இசைக்கலைஞன் மரித்தாலும் அவர் கொடுத்த இசை மறப்பதில்லை. திரும்பாத அந்த இனிய பூங்காற்றுக்கு இதய அஞ்சலி.