Wednesday 9 June 2010

அழுத்தக்காரி

என்னை பார்க்கும்போதெல்லாம்
வேகம் குறைக்கும் கால்கள்
ஒளிந்து பார்க்கும் கண்கள்
கோர்க்கத் துடிக்கும் கைகள்
பிய்த்து எறியும் பாதி நகம்
கீழே விழும் கூந்தல் ரோஜா
தலை கோதும் தாவணி நுனி
எனக்குப் பிடித்த கொலுசு
உனக்கான  ஒவ்வொன்றும்
எனக்கான காதலை
சொல்லாமல் சொல்கையில்
உன் உதடுகள் மட்டும்
இன்னும் ஏன்..


....சொல்லாமலே சென்றுவிட்டாய்
என் காத்திருப்பில்
நம்பிக்கை வைத்து;
ஐந்து வருடம் கழித்து
அதே சந்தில் பார்த்து
வேகம் கூட்டி
பக்கமே பாராமல்
நடுங்கும் விரல்கள்
வெண்ணிற புடவை
வெறும் நெற்றி
வெடித்த பாதம்

நடந்ததே நடந்தது
எல்லாமே எதிர்மறையாய்
அவள் மௌனம் மட்டும் மாறாமல்
இன்னும் என்னைக் கொன்றுகொண்டும்
விதியின் வழியில் சென்றுகொண்டும்!

8 comments:

  1. //....சொல்லாமலே சென்றுவிட்டாய்
    என் காத்திருப்பில்
    நம்பிக்கை வைத்து;//

    கலக்குங்க.

    ReplyDelete
  2. @கொல்லான்
    என்னம்மோ போங்க, நானும் எதையோ சொல்ல வர்றேன், நீங்களும் புரிஞ்ச மாதிரி என்னம்மோ சொல்றீங்க !!

    ReplyDelete
  3. நல்ல இருக்குங்க.. புரிஞ்ச மாதிரி இருக்கு ஆனா புரியல

    ReplyDelete
  4. ஆனாலும் இந்த வலியை அந்த பெண்ணவிட அவளை விரும்பின ஆணை மிகவும் பாதிக்கும் நினைக்கிறேன். இருப்பினும் இந்த வடிவமும் மொழியும் மெருகுடன் அமைந்திருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்..

    ReplyDelete
  5. @L.K
    புரிஞ்ச மாதிரி இருக்குங்களா? அடடா புரியவே கூடாதுன்னு இல்ல எழுதினேன்.. புரியலன்னா தான் கவிதையாமே :-)
    @க.பாலாசி
    தங்கள் ஊக்கத்திற்கு நன்றிங்க !!

    ReplyDelete
  6. http://encounter-ekambaram-ips.blogspot.com/2010/06/blog-post_13.html

    Your comments are highly appreciated. Thanks

    ReplyDelete
  7. //வெண்ணிற புடவை
    வெறும் நெற்றி
    வெடித்த பாதம்//

    சூப்பர்ப்... கீப் இட் அப்...

    ReplyDelete

தட்டிக்கொடுத்தும் திட்டுக்கொடுத்தும்......