Thursday 5 May 2011

ஆபரேஷன் 'ஜாஸ்மின் இட்லி'-பாகம் 2

பாகம் 1

ராத்திரி கனவெல்லாம் இட்லியும் சட்னியும் தான் போங்க. காத்தால எந்திரிச்சுப் பாத்தா, அட, மாவு லேசாப் பொங்கின மாதிரி இருக்கு. சந்தோசத்துல தூங்கீட்டு இருந்த மச்சான ஓடியாந்து எழுப்புனா, நாலு மணிக்கு எதுக்கு எழுப்புறேனு திட்டீட்டு மறுபடி தூங்கீட்டாரு. அடக்கெரகமே மணி நாலுதான் ஆச்சான்னு மாவக் கலக்கி ப்ரிட்ஜுல எடுத்து வெச்சுட்டு நானும் தூங்கிட்டேன். அப்புறம் ஆறு மணிக்கெல்லாம் ("மத்த  நாள்ல எட்டு மணிக்கு எந்திரிக்கிற ஆளு தானே நீயி?") எந்திரிச்சு இட்லி சுட்டு டிபன் பாக்சுக்குப் போட்டுக் குடுத்தாச்சு. யெஸ் யெஸ், அம்மாகிட்ட போன் போட்டு எப்டி இட்லி சுடறதுன்னு கேட்டுத் தான் ..ஹி ஹி . இட்லி பிடிக்கும்ன்னு சொன்னாரில்ல? அதனாலதான் லஞ்ச்சுக்கு போட்டுக் குடுத்து விட்டேன்.

இன்னொரு ரவுண்டு இட்லி ஊத்திவெச்சு, சுடச்சுட ப்ளேட்ல போட்டு சட்னி ஊத்தி பிச்சு வாயில வெக்கப்...
"ட்ரிங் ட்ரிங்"
"டேய், அந்த இட்லிய சாப்ட்டுடாதே"
"ஏங்க, உங்களுக்கு நைட்டு வேணும்ன்னா மறுபடி ஊத்திக்கலாங்க"
"மறுபடியுமா.....? மாவப் புளிக்க வெச்சு வெச்சு, கடசீல கெட்டே போச்சு போலிருக்கு, பாரு ! "

அட ஆமாம், ஒரு மாதிரியாத் தான் வாசம் வருது. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலியேன்னு நொந்து போயி எல்லா மாவையும் குப்பையில இல்ல இல்ல, (குப்பை எடுக்க வர்ற கவுன்சில்காரன் செத்துகித்து போயிட்டான்னா?)  சிங்க்ல கொட்டினேன். எங்கம்மா வேற, இட்லி எப்படி வந்துச்சுன்னு கேட்டாங்க; பொய் சொல்றதுன்னு ஆச்சு, அப்பறமென்ன? "ஹா, நீ கூட இந்த அளவுக்கு அருமையா இட்லி செய்ய மாட்டே, அவரு இனிமே தெனம் இட்லி வேணும்ன்னு சொன்னாரு"-எப்புடி !

அப்புறம் ஒரு நாள் இங்கிருக்கற என் பிரெண்டு ஒருத்திகிட்ட பேசிட்டு இருக்கும்போது யதேச்சையா இட்லி பத்தி பேசினோம். மீண்டும் ஒரு சலனம், மறுபடி இட்லி செஞ்சு பாப்போம்ன்னு. இந்தத் தடவை அளவக் கொஞ்சம் கொறச்சு (3 : 1.5 ) மாவாட்டி உடனேயே ஹீட்டருக்குப் பக்கத்துல வெச்சுட்டேன். சாயங்காலத்துல இருந்து அடுத்த நாள் காலைல வரைக்கும்தான், அப்புறம் புளிச்சிடுச்சு. எனக்கு சந்தோஷம் தாங்க முடியல.. மச்சானப் போயி கூட்டீட்டு வந்து காமிச்சேன். பாத்துட்டு அவரும்,  அடா, பரவாயில்லையே! அப்படீன்னு அவரும் பாராட்டினாரு. எல்லாம் சாயந்தரம் சாப்ட்டுக்கலாம்,ம்ம் ம்ம் , இப்போ கெளம்புங்க ன்னு பெரிசா மிரட்டல் வேற.. செஞ்சுகுடுக்கற மொக்கை இட்லிக்கு எத்தன வெட்டி பில்டப்பு!

சாயந்தரம் உருளைக்கிழங்கு கொழம்பு வெச்சுட்டேன். இட்லி ஊத்தி எடுத்து வெச்சுட்டு, இவரு எப்போ வருவாருன்னு பாத்துட்டு இருந்தேன். வரும்போதே போன் பண்ணி என்ன கொழம்புன்னு கேட்டு தெரிஞ்சுகிட்ட மச்சான்,  தான் சோதனை எலி ஆய்ட்டோம்னு தெரியாம ஆசையா சாப்பிட உக்காந்தாரு. ஒரு வாய் சாப்ட்டுட்டு என்னைப் பாத்தாரு பாருங்க ஒரு பார்வை; "உன்ன மாதிரி பொண்டாட்டி கெடைக்க எத்தன ஜென்மம் நான் புண்ணியம் பண்ணி இருக்கணும்" ங்கறா மாதிரி இருந்துச்சு.

நான் வேற உணர்ச்சிவசப்பட்டு "ச்ச, பரவா இல்லைங்க, உங்களுக்கு பிடிக்கறதெல்லாம் இனி ஒன்னொன்னா செஞ்சு குடுக்கறேன். நீங்க சாப்ட்டா சரி" ன்னு டயலாக்கு !!
"இந்த இட்லி மாதிரி ஒண்ணுன்னும் செஞ்சீன்னா, சீக்கிரம் எனக்கு தியாகி சிலை நானே வெச்சுக்குவேன்"
அப்டி என்ன பிரச்சனை கண்டுபுடிச்சாரோ ? ஒன்னுமில்லீங்க, லேசா வேகாத மாதிரி இருந்துச்சுன்னு எல்லா இட்லிகளையும் ஒரு பத்து நிமிஷம் (ஆமாம் பத்தே நிமிஷந்தான்) மைக்ரோவேவ் பண்ணினேன், அவ்ளோதான். இதுக்குப் போயி.. என்னன்னு இட்லிய ஒரு வாய் பிச்சுப் பாத்தா... வெளில எந்த சுவடும் தெரியாம உள்ள பூரா கருகி.. கிக்கிக்கி...

நல்லவேளை கொழம்பு வெச்சதால சம்பவத்துக்கு (?!?) அப்புறம் ரைஸ் வெச்சு சாப்ட்டோம்.இந்த எடத்துல நீங்க நெனைக்கிறது கேக்குது. இட்லி தான் செய்யத் தெரியாது மக்களே; மத்ததெல்லாம் சாப்பிடற மாதிரி நல்லாத் தான் இருக்கும். அதுக்கப்புறம் குட்டிப் பையனுக்கு அவுங்கப்பா அம்மா, ஆடு, இட்லின்னு சொல்லிக் குடுத்து பாவம் சந்தோஷப்பட்டுக்குவார். ஆனா பாருங்க விதி வலியது, இல்லையா? ஒரு நாள் சரவணபவன் வழியா போகவேண்டி வந்தது. அப்போ எடுத்தேன் ஒரு சபதம். வேறென்ன? இன்னும் ரெண்டே வாட்டி, செய் அல்லது தின்னாமல் மடி. பிடிச்ச விஷயத்துக்காக போராடறதுல அர்த்தம் இருக்கு- இட்லியோ, இதயமோ. என்ன நாஞ்சொல்றது? (தொர தத்துவம்லாம் பேசுது)

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் , மீண்டும் வேதாளத்தை தேடி முருங்கை மரம் ஏறினான். 

(அய்யய்யோ, இன்னைக்கும் முடிக்க முடியலையே.. சரி, நாளைக்கு முடிச்சுக்கலாம், ஓகே?)

பாகம்-3

10 comments:

  1. ஹா ஹா ஹா. இன்னுமா மாம்ஸ் உங்கள இட்லி செய்ய வுடுறரு. பாவம்.

    @ மாமோய், அக்கா இட்லி செய்யற நாளாப் பாத்து ஆபிஸ் டூர் ஏதாவது வைக்க சொல்லுங்க. பிழைச்சுடுவீங்க.

    ஆமா, உள்ள கருகி வெளிய வெள்ளையாகவா மைக்ரோவேவ்ல வருது. அடங்கொய்யாலே. மைக்ரோவேவ்ல ஈசியாக வரும்னு சொன்னாங்களே.

    ReplyDelete
  2. மாமன் கண்ணாலத்தப்பவே அவருக்கு சொன்னேன். ''நல்ல இட்டிலி வாழ்க்கைல சாப்டவே முடியாதுன்னு... '' அப்படியே நடந்துருச்சே.

    ReplyDelete
  3. idli sudaradhile ivvalavu kashtam irukkunnu innikkidhan enakku therinjadhu..pavam pradeepa nee..illa illa onnoda machandhan pavam...ama on payan sapidaradhukkulla kathuppiya? :))))))))

    ReplyDelete
  4. Pradeepa, unga machanukku silai vechangala elaya!!??unga machanuku Ennudaya aalntha anuthapangal.....

    ReplyDelete
  5. செம போஸ்ட்... இதே வம்பு தும்பு எல்லாம் என் வாழ்க்கைலயும் கடந்து தான் வந்து இருக்கேன்.. ஹா ஹா... நீ எழுதின ஸ்டைல் சூப்பர்...அதுவும் அந்த கருகின இட்லி செம காமெடி... ஹையோ ஹையோ

    ReplyDelete
  6. உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்... நன்றி... சுட்டி இதோ... http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_06.html

    ReplyDelete
  7. யக்கா.. இப்பவாவது இட்லி செய்ய வருதா :-)))

    நாலு கப் அரிசியும், ஒரு கப் உளுந்தும் போட்டு அரைச்சு செஞ்சு பாருங்க..

    ReplyDelete
  8. படிக்க நல்லா இருக்குதுங்க!! அனுபவிச்சவரு பாவந்தான்:((

    ReplyDelete
  9. @அனா: வெந்த இட்லிய மறுபடியும் பத்து நிமிஷம் வெச்சா? கருகாம வேற என்ன ஆகும்? (நம்ம புலமை அப்படி !!)
    @கொல்லான்: பாவம் மாமனும் மச்சானும் ஹோட்டல்ல சாப்டுக்குங்க :)

    @பிரியா: அண்ணி, என்ன பய்யன் நான் சுடர இட்லியத் தான் சாப்பிட்டு ஒல்லியா இருக்கான் ;)
    மச்சானுக்கு சிலை வெக்கறதுக்குள்ள உஷாராயிட்டேன்

    @அப்பாவி: //இதே வம்பு தும்பு எல்லாம் என் வாழ்க்கைலயும் கடந்து தான் வந்து இருக்கேன்// - அப்படீன்னா இப்போ நல்லா இட்லி சுடரீங்கன்னு சொல்ல வரீங்களா? ஐ ஐ , பொய் !!

    @அமைதிச்சாரல்: ஒரு ஜீவன், ஒரே ஒரு ஜீவன், நீங்க மட்டும்தான் என்னை பாத்து பாவப்பட்டு ரெசிபி குடுக்கறீங்க. மத்த மக்கள் எல்லாருமே என்னை மாதிரி தான் போல !! நன்றிங்க .

    @ தெய்வசுகந்தி : நன்றிங்க. நீங்களும் நம்ம ஊர்பக்கம்ன்னு தெரிஞ்சுகிட்டேன். பாத்ததுல, வந்ததுல சந்தோஷம்.

    ReplyDelete

தட்டிக்கொடுத்தும் திட்டுக்கொடுத்தும்......