Sunday 1 May 2011

ராஜ கலியாணத்துக்குப் போனேனா..

முன்குறிப்பு: நம்மள மட்டும் கலியாணத்துக்கு கூப்டாங்கன்னு மித்தவங்க எல்லாம் கோவிக்க கூடாது பாருங்க. அதனால நான் நான் யாரு கிட்டயும் முன்னாடியே சொல்லல.

28 ஆம் தேதி-பெரிய்ய நீளமான காரு. பேரு என்னம்மோ சொன்னாரு லியோவோ, லிமோவோ. அதை தான் அனுப்பி இருந்தாங்க. காலைல முஹூர்த்தம்ங்கறதால நைட்டே வரச் சொல்லீட்டாங்க அந்த ஓட்டலுக்கு. பேரெல்லாம் நமக்கு நெனப்பில்லீங்க. நீங்க டீவீல பாத்தாலும் பாத்திருப்பீங்க.. நைட்டு ரிசப்ஷன் இல்ல, அடுத்த நாள் தான். முப்பது வருஷங்கழிச்சு நடக்குறதால இவுங்க முறைப்படி சீர்க்கல்யாணம் தான். ஆனா ராத்திரி பூ கட்ற வேலை கூட இல்ல பாத்துக்கோங்க. எல்லாம் அவுங்களே ஆளுங்கள உட்டு பண்ணீட்டாங்க.

29 ஆம் தேதி : காலைல எந்திரிச்சு நாங்கெல்லாம் ரெடி ஆகியாச்சு, பொண்ணு பத்து அம்பதுக்கு தான் கெளம்பனுமாமே, பொள்ளாச்சி ஜோசியரு சொல்லீருப்பாரு போல. பத்தேகால்.. வில்லியம்ஸ் கெளம்பீட்டாரு அவுங்க வீட்டுல இருந்து. நானே சொல்லக் கூடாது, இருந்தாலும் மாப்பிள்ள பரவால்லீங்க, நல்ல குணம். காரு போற வழில எல்லாருக்கும் டாட்டா காட்டிட்டு போறாரு; வாத்தியக்கார மக்களுக்கெல்லாம் சல்யூட்டு வேற வெச்சாரு; சர்ச்சுல எல்லாருகிட்டயும் நல்லா பேசறாரு; ஆனா இத்தன செலவு பண்றாங்க, பாவம் அவுருக்கு ஒரு பட்டு வேட்டி சட்டை வாங்கீருக்கலாம், யூனிபாரத்துலியே வந்தாரு. ஒரம்பரைங்க எல்லாம் முன்னாடியே வந்துட்டாங்க. ராஜ பரம்பரை எல்லாம் அப்புறம் தான் வந்தாங்க; பொண்ணோட அம்மாவும் தம்பியும் ஒரு வண்டில வந்தாங்க. அவுங்க நின்னு எல்லாரயும் கும்புடு போட்டு வாங்கன்னு சொல்லணும், மெதுவா வந்தா என்ன அர்த்தம்? இதப் போயி குறை சொன்னா சங்கடப்படுவாங்கன்னு நானும் பேசாம இருந்துட்டேன்.

அப்புறம் 85வயசு ராணியம்மா வந்தாங்க, நல்லா மஞ்சா கலர் கோட்டும், தொப்பியும் போட்டுக்கிட்டு. நானு ஒரு நிமிஷம் எங்க அப்பத்தாவ நெனச்சுகிட்டேன், அது எப்பிடி இருக்கு, இவுங்க எப்படி இருக்காங்கன்னு.

நம்மூரு மாதிரியே கடசீல வந்திச்சுப்பா பொண்ணு கேதரின், அவங்கப்பா கூட. செம வரவேற்ப்பு பொதுமக்கள் கிட்ட இருந்து. பொடவ முந்தானியாட்டம் கவுனுக்குப் பின்னாடி நீளமான துணி-ரெண்டு மீட்டர் இருக்கும்.எல்லாரும் பொண்ணு என்ன போட்டிருக்கும் , என்ன சிங்காரிச்சு இருக்கும்னு ஒரே ஆர்வம். பின்ன, எந்தத் துணிக்கடை, எந்த டைலருன்னு சீக்ரட்டா வெச்சிருந்தாங்க. எனக்கென்னம்மோ மருதாணி போட்டிருந்தா நல்லா செவசெவன்னு இருக்கறதுக்கு நல்லா இருந்திருக்கும்ன்னு தோணுச்சு. என்ன பீட்டிபார்லர் பொண்ணோ, ஒழுங்காவே பண்ணுல போங்க.

தொனப்பொண்ணு நல்லாத் தான் இருக்குது. பொண்ணோட தங்கச்சியாமா. (ஆங் மறந்துட்டேன், நல்ல பையனா இருந்தா ஜாதகம் அனுப்பி வெக்க சொன்னாங்க.)

மாப்பிள்ளை மொதல்ல போயி பாதிரியார் முன்னாடி நின்னாரு. பொண்ணு அழகா வெக்கபட்டுகிட்டே சிரிச்ச மொகமா இருந்துச்சு போங்க. அவங்கப்பா கைய்யப் புடிச்சுக் கூட்டீட்டு வந்து மாப்பிள்ள பக்கத்துல நிக்க வெச்சாரு. தார வாத்துக் குடுத்து, அப்புறம் ரெண்டு பேரும் மோதிரம் மாத்தி கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுது.


ஒருத்தர் ஒருத்தரா மணமக்கள வாழ்த்திப் பேசினாங்க. வட்டம் வட்டாரம் இதெல்லாம் பத்தி பேசாம போறது இந்தூர்ல தான் போங்க. அப்புறம் ரெண்டு பேரும் தம்பதி சகிதரா குதிரை சாரட்ல அரண்மனைக்குத் திரும்பினாங்க. வழியெல்லாம் மக்கள் கூட்டம் கடலாட்டம். யப்பப்பா, எள்ளு வுளுந்தா எண்ணை ஆகி, அது ஆவியாவும் போயிரும் போங்க. அப்புறம் அரண்மனையில நாந்தான் ஆரத்தி எடுத்து பொண்ணு மாப்பிள்ளைக்கு பாலும் பழமும் குடுத்துட்டு உக்கார சொன்னேன். அப்புறம் வில்லியமு தான் , சரியக்கா, மச்சான் எப்பிடி இருக்காங்கன்னு கேக்க ஆரம்பிக்கையில ...

(ட்ரிங்... ட்ரிங்..) "அப்டீங்களா, சரி கெளம்பி வர்றேன்"

எம்புள்ள ராத்திரியில இருந்து அம்மாவக் காணமேன்னு ஒரே அலுவாச்சீன்னு மச்சான் தான், போனுல. அப்புறம் என்ன பண்றது, சொல்லீட்டு கெளம்பீட்டேன்.

வரையில நெனச்சுட்டே வர்றேன், இந்தூரு பொம்ளைங்க எல்லாம் பேசிக்க மாட்டாங்களா? இந்த நகை எங்கே வாங்கினது, இந்த பொடவை எங்கே வாங்கினது, தொப்பி, செருப்பு என்ன வெலைன்னு? அதெல்லாம் பேசாத என்ன கலியாணமோ !

வீட்டுக்கு வந்தப்புறம் நடந்ததெல்லாம் மூணாவது மனுசியாட்டம் டிவியில பாத்து தெரிஞ்சுகிட்டேன். நானில்லைன்கிற தைரியத்துல சோடி ரெண்டும் ..ம்ம்..

இன்னைக்கு காலைல புதுப் பொண்ணும் மாப்பிள்ளையும் எங்கியோ கெளம்பி ஹெலிகாப்டர்ல போனாங்க, எங்க போனாங்கன்னு யாருக்குமே தெரீல..ஷ்ஷ் .. யாருகிட்டயும் சொல்லிப்போடாதீங்க, எங்கூட்டுக்கு தான் சோறாக்கிப் போட வரச் சொல்லி இருந்தேன்.

இந்த போட்டோ தான், பாத்துக்குங்க.


நானெப்படி இதுல இருப்பேன்? எடுத்ததே நான்தானே? ஹி ஹி ....

18 comments:

  1. @அனா- வாங்க சுனாமி , எப்படி இருக்கீங்க?
    @அருள்- ஹி ஹி

    ReplyDelete
  2. ஆத்தா மகமாயி... கொஞ்சம் கால காட்டு... இது எங்கூரு ரீலு உங்கூரு ரீல் இல்ல, உலக ரீலுடா சாமி... அதுவும் பொண்ணோட தங்கச்சிக்கு ஜாதகம் அனுப்ப சொன்னாங்க சொன்ன பாரு... அங்கேயே நான் மயக்கம் போட்டுட்டேன்... அப்புறம் வில்லியமு "மச்சான் எப்பிடி இருக்காங்கன்னு" கேக்கைலனு சொன்னா பாரு... ஹார்ட் அட்டாக் வராம போனது புண்ணியம் அம்மணி... இனிமே என்னை யாராச்சும் அலைப்பறைனு சொல்லட்டும்... உன்ர பக்கத்துக்கு அனுப்பி உடறேன்... என்னை நல்லவன்னு சொல்லிருவாங்க கண்டிப்பா... என்னை நீ அக்கா அக்கானு கூப்ட்டப்பவே எனக்கு உன்னை பாத்தா கொஞ்சம் பயம் தான்... இனி....... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

    //நானெப்படி இதுல இருப்பேன்? எடுத்ததே நான்தானே? ஹி ஹி//
    யாராச்சும் ஆம்புலன்ஸ் கூப்பிடுங்க.......:))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  3. @அப்பாவி 'தம்'கமணி: அக்கா, இப்பத் தான் நெனப்பே வந்துச்சு. புதுப் பொண்ணுக்கு புகுந்த வீட்டுல புதுசா எதாச்சும் சமச்சுப் போட்டு எல்லாரையும் அசத்தணும்ன்னு இன்னைக்கு எனக்கு போன் போட்டுச்சு. நான் உங்க மெயில் ஐடி குடுத்து இட்லி ரெசிப்பி கேட்டுக்க அக்கா கிட்டன்னு சொன்னேன், ரெசிபி அனுப்புனீங்க? ;)

    ReplyDelete
  4. கொஞ்ச நாளா உன்னோட ப்ளாக் எதுவும் இல்லாம சந்தோசமா இருந்தோம்.. திருப்பியும் ஆரம்பிச்சிட்டியா..தாங்க முடியல

    ReplyDelete
  5. @பாலகுமார்: எல்லாம் வயித்தெரிச்சல்-கல்யாணத்துக்கு கூப்புடுலன்னு.

    ReplyDelete
  6. நாத்தனார் பட்டம் கட்டாம எஸ் ஆகியாச்சா?

    ReplyDelete
  7. @ குசும்பன்: பட்டம் கிட்டம்ன்னு ஓல்டு ஸ்டைல் ல இருக்கீங்க நீங்க. அவுங்க ஹனிமூன் பேக்கேஜ் தான் நான் குடுத்த கிப்ட்டு. :)

    ReplyDelete
  8. அக்கா , என்னோட ஜாதகம் இப்போவே அனுப்றேன். மத்தபடி பொண்ணு , பொண்ணு பேமிலி எப்பிடி ? ஒடனே கடுதாசி போடுங்க.. நல்ல முகூர்த்தமா அம்மாவ பாக்க சொல்லிடறேன்....
    பி.கு : செம்ம post !

    ReplyDelete
  9. அப்பாவி பரவால்லைன்னு ஆக்கிட்டீங்க!! தாங்க முடியலங்க!!

    ReplyDelete
  10. ஆத்தா.. செம அலப்பறையா இருக்கே :-))))

    ReplyDelete
  11. @ dj-haran : தம்பி, பொண்ணு உன்னோட அளவுக்கு அழகில்லையே.. நான் என்ன செய்வேன் !

    @தெய்வசுகந்தி & @அமைதிச்சாரல் : ஒருத்தர் இருந்தா பத்தாத மாதிரி ஒரு பீலிங்கு. அதுதான் மக்கள் பாவம்ன்னு நானும் சேவை செய்ய வந்தேன் :)

    ReplyDelete
  12. ada paavi...romba neeram kashtapattu padichaen

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. பிரதீபா, இந்த கல்யாண கதைய இப்போதான் நானும் படிச்சேன். இதுல ஆச்சரிய படறதுக்கு ஒன்னும் இல்ல நீங்க சொல்லறது எல்லாம் உண்மைதான் ஏண்ணா நானும் இல்ல கல்யாணத்துக்கு வந்துருந்தேன்...உங்கள பாத்தேன் இல்ல அந்த செருப்பு ஒடுர எடத்துல கூட ஒரு செருப்பு செலக்ட் பண்ணிக்கிட்டு இருந்திங்களே...நான் பாத்தேன் ஒங்கள. என்ன கூட நீங்க பாத்து கை ஆட்டுல...அதாங்க நான் queen கூட பேசிகிட்டு இருந்தபோது...இப்போ நெனப்புக்கு வருதா...ம்ம்ம்.

    அப்புறம் ஏன் போட்டோ ல நான் இல்லைன்னு கேக்காதிங்க....பிரதீபா அக்கா கேமரா ந நான் பிளாஷ் லைட் புடிசிகிட்டு இருந்தேன்.

    ஹ ஹா ஹாஆ ..nice one..really enjoyed reading.

    ReplyDelete

தட்டிக்கொடுத்தும் திட்டுக்கொடுத்தும்......