நம் தேசிய கீதத்துக்காக இரண்டு நிமிடங்கள் எழுந்து நின்று மரியாதை செய்யக் கூடத் தோன்றாத மக்களையும் பார்க்கிறோம்; இவர்களையும் பார்க்கிறோம் -ஒரே பாரதத்தில்.
வண்டியில் போனவன் விமானத்தில் போறவனை பாத்து நெனச்சானாம், என்னடா நம்மால அப்படி போக முடியலையேன்னு ; அவன் முன்னாடி ஒருத்தன் நடந்து போய்கிட்டிருந்தானாம். வண்டியில போற அளவுக்காச்சும் கடவுள் வெச்சிருக்காரே பரவாயில்லைன்னு வேலைய பாக்க போனானாம். நடந்து போறவன் கார்ல போனவன பாத்து நெனச்சானாம், நமக்கு அப்படி முடியலையேன்னு ; அப்போ காலே இல்லாத ஒருத்தர் இன்னொருத்தர் உதவியோட ரோடு கிராஸ் பண்றத பாத்தானாம். நடந்து போற அளவுக்காச்சும் கடவுள் நம்மள வெச்சிருக்காரே சந்தோஷமப்பான்னு நெனச்சிட்டு போயிட்டானாம்.
இந்த வீடியோ பார்க்கும்போது எனக்கு கடவுள் அருளிய வாழ்க்கை திருப்திகரமாகத் தோன்றியது; நல்லா இருந்தும் என்னத்த சாதிச்சு கிழிச்சிருக்கோம் என்றும் தோன்றியது.ஆனாலும் நிக் சொல்வது போல நானும் சொல்கிறேன், I Love my life.
பார்த்து முடித்தபின் நமக்குள் ஏதோ ஒரு மாற்றம் நிகழும் என்பது உறுதி !!