முன்குறிப்பு: நம்மள மட்டும் கலியாணத்துக்கு கூப்டாங்கன்னு மித்தவங்க எல்லாம் கோவிக்க கூடாது பாருங்க. அதனால நான் நான் யாரு கிட்டயும் முன்னாடியே சொல்லல.
28 ஆம் தேதி-பெரிய்ய நீளமான காரு. பேரு என்னம்மோ சொன்னாரு லியோவோ, லிமோவோ. அதை தான் அனுப்பி இருந்தாங்க. காலைல முஹூர்த்தம்ங்கறதால நைட்டே வரச் சொல்லீட்டாங்க அந்த ஓட்டலுக்கு. பேரெல்லாம் நமக்கு நெனப்பில்லீங்க. நீங்க டீவீல பாத்தாலும் பாத்திருப்பீங்க.. நைட்டு ரிசப்ஷன் இல்ல, அடுத்த நாள் தான். முப்பது வருஷங்கழிச்சு நடக்குறதால இவுங்க முறைப்படி சீர்க்கல்யாணம் தான். ஆனா ராத்திரி பூ கட்ற வேலை கூட இல்ல பாத்துக்கோங்க. எல்லாம் அவுங்களே ஆளுங்கள உட்டு பண்ணீட்டாங்க.
29 ஆம் தேதி : காலைல எந்திரிச்சு நாங்கெல்லாம் ரெடி ஆகியாச்சு, பொண்ணு பத்து அம்பதுக்கு தான் கெளம்பனுமாமே, பொள்ளாச்சி ஜோசியரு சொல்லீருப்பாரு போல. பத்தேகால்.. வில்லியம்ஸ் கெளம்பீட்டாரு அவுங்க வீட்டுல இருந்து. நானே சொல்லக் கூடாது, இருந்தாலும் மாப்பிள்ள பரவால்லீங்க, நல்ல குணம். காரு போற வழில எல்லாருக்கும் டாட்டா காட்டிட்டு போறாரு; வாத்தியக்கார மக்களுக்கெல்லாம் சல்யூட்டு வேற வெச்சாரு; சர்ச்சுல எல்லாருகிட்டயும் நல்லா பேசறாரு; ஆனா இத்தன செலவு பண்றாங்க, பாவம் அவுருக்கு ஒரு பட்டு வேட்டி சட்டை வாங்கீருக்கலாம், யூனிபாரத்துலியே வந்தாரு. ஒரம்பரைங்க எல்லாம் முன்னாடியே வந்துட்டாங்க. ராஜ பரம்பரை எல்லாம் அப்புறம் தான் வந்தாங்க; பொண்ணோட அம்மாவும் தம்பியும் ஒரு வண்டில வந்தாங்க. அவுங்க நின்னு எல்லாரயும் கும்புடு போட்டு வாங்கன்னு சொல்லணும், மெதுவா வந்தா என்ன அர்த்தம்? இதப் போயி குறை சொன்னா சங்கடப்படுவாங்கன்னு நானும் பேசாம இருந்துட்டேன்.
அப்புறம் 85வயசு ராணியம்மா வந்தாங்க, நல்லா மஞ்சா கலர் கோட்டும், தொப்பியும் போட்டுக்கிட்டு. நானு ஒரு நிமிஷம் எங்க அப்பத்தாவ நெனச்சுகிட்டேன், அது எப்பிடி இருக்கு, இவுங்க எப்படி இருக்காங்கன்னு.
நம்மூரு மாதிரியே கடசீல வந்திச்சுப்பா பொண்ணு கேதரின், அவங்கப்பா கூட. செம வரவேற்ப்பு பொதுமக்கள் கிட்ட இருந்து. பொடவ முந்தானியாட்டம் கவுனுக்குப் பின்னாடி நீளமான துணி-ரெண்டு மீட்டர் இருக்கும்.எல்லாரும் பொண்ணு என்ன போட்டிருக்கும் , என்ன சிங்காரிச்சு இருக்கும்னு ஒரே ஆர்வம். பின்ன, எந்தத் துணிக்கடை, எந்த டைலருன்னு சீக்ரட்டா வெச்சிருந்தாங்க. எனக்கென்னம்மோ மருதாணி போட்டிருந்தா நல்லா செவசெவன்னு இருக்கறதுக்கு நல்லா இருந்திருக்கும்ன்னு தோணுச்சு. என்ன பீட்டிபார்லர் பொண்ணோ, ஒழுங்காவே பண்ணுல போங்க.
தொனப்பொண்ணு நல்லாத் தான் இருக்குது. பொண்ணோட தங்கச்சியாமா. (ஆங் மறந்துட்டேன், நல்ல பையனா இருந்தா ஜாதகம் அனுப்பி வெக்க சொன்னாங்க.)
மாப்பிள்ளை மொதல்ல போயி பாதிரியார் முன்னாடி நின்னாரு. பொண்ணு அழகா வெக்கபட்டுகிட்டே சிரிச்ச மொகமா இருந்துச்சு போங்க. அவங்கப்பா கைய்யப் புடிச்சுக் கூட்டீட்டு வந்து மாப்பிள்ள பக்கத்துல நிக்க வெச்சாரு. தார வாத்துக் குடுத்து, அப்புறம் ரெண்டு பேரும் மோதிரம் மாத்தி கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுது.
ஒருத்தர் ஒருத்தரா மணமக்கள வாழ்த்திப் பேசினாங்க. வட்டம் வட்டாரம் இதெல்லாம் பத்தி பேசாம போறது இந்தூர்ல தான் போங்க. அப்புறம் ரெண்டு பேரும் தம்பதி சகிதரா குதிரை சாரட்ல அரண்மனைக்குத் திரும்பினாங்க. வழியெல்லாம் மக்கள் கூட்டம் கடலாட்டம். யப்பப்பா, எள்ளு வுளுந்தா எண்ணை ஆகி, அது ஆவியாவும் போயிரும் போங்க. அப்புறம் அரண்மனையில நாந்தான் ஆரத்தி எடுத்து பொண்ணு மாப்பிள்ளைக்கு பாலும் பழமும் குடுத்துட்டு உக்கார சொன்னேன். அப்புறம் வில்லியமு தான் , சரியக்கா, மச்சான் எப்பிடி இருக்காங்கன்னு கேக்க ஆரம்பிக்கையில ...
(ட்ரிங்... ட்ரிங்..) "அப்டீங்களா, சரி கெளம்பி வர்றேன்"
எம்புள்ள ராத்திரியில இருந்து அம்மாவக் காணமேன்னு ஒரே அலுவாச்சீன்னு மச்சான் தான், போனுல. அப்புறம் என்ன பண்றது, சொல்லீட்டு கெளம்பீட்டேன்.
வரையில நெனச்சுட்டே வர்றேன், இந்தூரு பொம்ளைங்க எல்லாம் பேசிக்க மாட்டாங்களா? இந்த நகை எங்கே வாங்கினது, இந்த பொடவை எங்கே வாங்கினது, தொப்பி, செருப்பு என்ன வெலைன்னு? அதெல்லாம் பேசாத என்ன கலியாணமோ !
வீட்டுக்கு வந்தப்புறம் நடந்ததெல்லாம் மூணாவது மனுசியாட்டம் டிவியில பாத்து தெரிஞ்சுகிட்டேன். நானில்லைன்கிற தைரியத்துல சோடி ரெண்டும் ..ம்ம்..
இன்னைக்கு காலைல புதுப் பொண்ணும் மாப்பிள்ளையும் எங்கியோ கெளம்பி ஹெலிகாப்டர்ல போனாங்க, எங்க போனாங்கன்னு யாருக்குமே தெரீல..ஷ்ஷ் .. யாருகிட்டயும் சொல்லிப்போடாதீங்க, எங்கூட்டுக்கு தான் சோறாக்கிப் போட வரச் சொல்லி இருந்தேன்.
இந்த போட்டோ தான், பாத்துக்குங்க.
நானெப்படி இதுல இருப்பேன்? எடுத்ததே நான்தானே? ஹி ஹி ....
Showing posts with label இங்கிலாந்து. Show all posts
Showing posts with label இங்கிலாந்து. Show all posts
Sunday, 1 May 2011
Thursday, 27 May 2010
இவர்கள் தான் "மாம்" "டாட்"
குழந்தைகள் பெறுவதற்கு முன் குழந்தைகள் சம்மந்தப்பட்ட விஷயங்கள் பெரிதாகத் தெரிவதில்லை. தந்தையென தாயென ஆனபின்பு அத்தனையும், அதற்கும் மேலும் நன்றாய் புரிகின்றது. முன்பெல்லாம் வழியில் பார்க்கின்ற எந்த குழந்தையாவது அழுது கொண்டிருந்தால் 'அடடா அழுகிறதே பாப்பா'வோடு கவலை முடிகிறது ; இதே பின்னாளில் மனம் பதறுகிறது, ஓடிச் சென்று பார்க்க துடிக்கிறது; வாரி எடுத்துத் தேற்ற அலைகின்றது.
குசும்பன் அவர்கள் ஒரு பதிவு எழுதி இருந்தார், தொட்டில் கைதி------no குசும்பு என்று! அதன் மீட்சியாகவோ இல்லை நீட்சியாகவோ இந்த என் அனுபவத்தை சொல்லலாம்;
.
கார்முகிலுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் குழந்தைகள் சம்மந்தப்பட்ட வகுப்புகள் இருக்கும். அதில் ஒன்று எல்லாரும் தத்தமது குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு பழக விட்டு, கடைசியில் கிளம்பும்போது ரைம்ஸ் பாடி முடிப்பது. இன்று மேற்குறிப்பிட்ட அந்த வகுப்பு இருந்தது. முதல் ஒரு மணி நேரம் எல்லா குழந்தைகளும் மழலைகூட இல்லாத ஒரு சத்தங்களில் அவர்களுக்குள் பேசிக்கொண்டும், இழுத்துக்கொண்டும், தவழ்ந்து கொண்டும், விழுந்துகொண்டும் மகிழ்வாய் விளையாடிக்கொண்டு இருந்தனர். திடீரென ஒரு குழந்தை என் துப்பட்டாவை பிடித்து இழுத்து, வாயில் வைக்கப் போனது. அப்போது அதன் அம்மா சடாரென பிடித்து அந்த குழந்தையை இழுத்துக் கோபத்தோடு "No, its hers" என்று சொன்னாள். அந்த ஏழு மாதக் குழந்தைக்குத் தெரியுமா, அது என்னுடைய துப்பட்டா என்று? ஒழுக்கம் கற்றுக்கொடுங்கள், ஆனால் இப்போதிருந்தே வேண்டாமே! வருடங்கள் ஓடுகையில் தானாகவே சேட்டைகள் தொலைக்கட்டுமே, நாம் ஏன் அடக்க வேண்டும்?
இன்னொரு குழந்தை மற்றொரு குழந்தையின் கையைக் கிள்ள முயன்று கொண்டிருந்தது. நான் பிரித்து விடலாம் என்று முற்படுகையில் திடீரென அந்த குழந்தையின் அம்மா அதன் சட்டையை பின்னாலிருந்து கொத்தாகப் பற்றி அப்படியே தூக்கி வேறிடத்தில் கொண்டு விட்டாள். "Oh Emiley, your mom turned you as a flying girl" என்று பாராட்டுக்கள் வேறு!! என்ன கொடுமைடா சாமி!! இப்படி நம் ஊரில் செய்தால் "சீ நீயும் ஒரு தாயா" என்று தான் 'பாராட்டுக்கள்' வரும்.
எரிச்சலோடு வகுப்பு முடித்து வெளியில் வந்தால், உச்சமோ உச்சம். அங்கு ஒரு 'dad' ஸ்ட்ரோலரில்(குழந்தைகளை உக்கார வைத்து தள்ளும் வண்டி) இரண்டு குழந்தைகளை வைத்து தள்ளிக்கொண்டு இருந்தார். ஒன்று வீரிட்டு கத்துகிறது, பலமாக அழுதுகொண்டே இருக்கிறது; அழும் குழந்தையைக் கையில் எடுக்காமலேயே அந்தப் பாவி முன்னும் பின்னும் வண்டியை தள்ளிக்கொண்டு இருந்தான். ஒரு நிமிடம் இரண்டு நிமிடங்களல்ல, அரை மணி நேரம். எனக்கு நெஞ்செல்லாம் பதறியது, எந்த பொருளும் வாங்க முடியாமல் கவனம் முழுதும் எப்போது அழுகையை நிறுத்தும் என்றே இருக்கிறது. ஓங்கி ஒரு அறை அவனை விட்டாலென்ன என்று கூட கோபம் எழுந்தது. அழுது அழுது ஓய்ந்து கடைசியில் அந்தக் குழந்தை தூங்கியே விட்டது. நமக்கு இருக்கும் அந்த பரிதவிப்பு, அந்த அரவணைப்பு இவர்களிடம் ஏன் இல்லை? என்ன சொல்லித் தருகிறார்கள் குழந்தைகளுக்கு? சத்தியமாய் புரியவில்லை.
நம் மக்களைப் பொறுத்தவரை குழந்தைக்கு அர்த்தம் குறும்பு என்று தான் தெரியும்; கடிந்து கொண்டாலும் கூட ரசிக்கத்தான் தெரியும்.இவர்களிடத்தும் பாசம் இருக்கிறது, ஆனால் அதை காண்பிக்கும் முறை நம்மைக் கொஞ்சம் அதிர்ச்சியடையத்தான் செய்கிறது.

Subscribe to:
Posts (Atom)