முஸ்கி: எழுத எழுத பதிவு பெரிதாகி வி( டும் / ட்டால்), தொடரும் போடப்படும்.
இந்தப் படத்தைப் பார்த்தவுடன் நாவூறினால், நீங்கள் நிச்சயம் இந்தப் பதிவினைத் தொடர்ந்து படிப்பதில் அர்த்தம் இருக்கிறது.
வீட்டு இட்லியை பொறுத்த வரை வெகு சிலர் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். மற்றவர்கள் கடையில் பிரசாதம் பெற்றுக் கொள்ளவேண்டியது தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம், இட்லியை நினைத்தால். சென்னையில் என் ஆபீசுக்கு எதிரில் முருகன் இட்லி கடை இருந்தது முதல், வாக்கப்பட்டுப் போன இடம் வரை, அட்டகாசமான இட்லிக்குப் பஞ்சமே இல்லை. நம் ஊர் மக்கள் யாரிடமும் சொல்லிப் பாருங்கள் இட்லி என்ற ஒரே ஒரு வார்த்தையை. எங்க போனாலும் இட்லி சாப்பிடற மாதிரி வருமா என்று ஆண்கள் அதோடு நிறுத்திக் கொள்வார்கள்; ஆனால் பெண்களிடமிருந்து, அதுவும் முக்கியமாகத் தங்கமணிகளிடமிருந்து உடனே அடுத்த கேள்வி கிளம்பும். 'உங்களுக்கு நல்லா இட்லி சுட வருமா, பஞ்சு மாதிரி' என்று. ஒன்பது மணிக்கு மீட்டிங் என்றாலும் கூட எட்டு ஐம்பதிற்கு சரவணபவனிலும் சங்கீதாவிலும் சாம்பாரும் ஸ்பூனுமாகப் பலரை உட்கார வைத்தது எது? அப்படி என்ன தான் வரலாற்று முக்கியத்துவம் அந்த இட்லிக்கு? இனி...
சென்னையில பிரெண்ட்ஸ் கூட தங்கி இருந்தப்போ சமைக்கிறோம் பேர்வழின்னு பாத்திரம் எல்லாம் இருக்குமே தவிர ஒன்னையும் செஞ்சதில்ல. தோசை மாவு வாங்கி தோசை ஊத்திக்குவோம். அவ்ளோதான். இட்லி குக்கர் எல்லாம் கெடையாது. வேணும்ன்னா எந்த ஹோட்டல்ல இருந்தும் ஆர்டர் பண்ணிக்கலாமே. சென்னை வாழ்கன்னு சொல்லிட்டே நெறைய தடவை எட்டு இட்லி (நிஜமாவே எட்டு தாங்க), ரெண்டு வடை, மூணு கப் சாம்பார்ன்னு செம்ம கட்டு கட்டியிருக்கேன். ஆனா அதெல்லாம் சங்ககாலம் மாதிரி திங்ககாலம்ன்னு நெனச்சுக்குவேன்.
UK ரங்கமணிக்கு கல்யாணப்பட்டு (வாக்கப்பட்டுன்னு சொல்றோம், கல்யாணப்பட்டுன்னு சொல்லக் கூடாதா) , சென்னை இனிமே ஊருக்கு போற வழில இருக்குற எடம் அவ்ளோதான்னு ஆய்டிச்சு. அன்னிக்கு தான் அன்னிக்கே தான் மொதல் தடவையா பீல் பண்ணினேன், நல்ல இட்லிக்கு நம்ம எங்கே போறதுன்னு. ரங்கமணி கிட்ட மொதல் தடவை பேசும்போதே நைசா கேட்டேன், உங்களுக்கு இட்லி பிடிக்குமான்னு; ரொம்ப புடிக்கும், இத்தன நாள் இங்க இட்லி சாப்பிடாம வாழ்ந்துட்டேன், நல்லவேளை நீ வந்ததுக்கு அப்புறம் அந்த பிரச்சனை இல்லைன்னாரு. கிழிஞ்சுது போன்னு நெனச்சுகிட்டு , பாவம் என்னை மாதிரியே அவருக்கும் இட்லி சுடத் தெரியாதுன்னு விட்டுட்டேன் (பின்ன? சமைக்கத் தெரியும்ன்னு சொல்லியில்ல கல்யாணம் பண்ணிகிட்டாரு)
புது பொண்டாட்டி ஸ்டேடஸ் இருக்கே, அதுல வர்ற நன்மைகள் விட எதிர்பார்ப்புகள் தான் நம்மை டாரு ஆக்கும். "எல்லாம் நாந்தான்" ன்னு இப்ப சலிச்சுக்குற அதே அவர்தான் முன்னாடி "எல்லாமே அவதான்" ன்னு பெருமையா பீத்திக்குவாரு( அறியாப் பிள்ள பாவம், வேற என்ன சொல்லுவார்). இப்பிடியாப் போயிட்டு இருக்கும்போது UK க்கு வந்தப்புறமா ஒரு நாள், ஒரு மொக்கை படம் பாத்துட்டு இருக்கும்போது திடீர்னு ஒரு சிந்தனை; அவருக்குத் தான் புடிக்கும்ன்னு சொன்னாரே, நம்ம ஏன் முயற்சி செஞ்சு நம்மளே இட்லி சுடக் கூடாது? இட்லித் தட்டு எடுத்துட்டு வந்திருக்கேன்; அப்புறம்ம்ம் .. மிக்சி இருக்கே, அரிசி-இருக்கு; உளுந்து? ம்ம்.. தேடித் பாத்தா அதுவும் ஊர்ல இருந்து கொண்டு வந்திருக்கேன்(வட சுடனும்ல?ஹி ஹி). ஆனா ரெசிபி? போடு ஊருக்கு ஒரு ஸ்கைப் வீடியோ கால். நம்புனா நம்புங்க, அரிசி ஊற வெச்சதுல இருந்து மாவாட்டி வெக்கற வரைக்கும் அம்மா லைன்ல இருந்தாங்க. நமக்கு அவ்வளவு நாலேஜ் இட்லி செய்முறைல !
எங்கம்மா அரிசியும் உளுந்தும் மொதல்ல ஊறவெய்யின்னு சொல்லி வாய மூடறதுக்குள்ள கடகடன்னு செஞ்சுட்டோம்ல.. நாங்கெல்லாம் முட்டைன்னா ஆம்லெட்டா நிக்கறவங்க. பாஸ்மதி அரிசிய ஊற வெச்சு, அதுவும் சும்மா இல்லீங்க, 6 கப்( ஒரு வாரதுக்காமா..). உளுந்து என்னா உளுந்துன்னு நெனைக்கறீங்க? பொட்டுளுந்து. அப்பத் தான் மாவு நெறைய ஆகும்ன்னு எங்கம்மாயி சொன்ன ஞாபகம். அது ஒரு அஞ்சு கப் (எந்த ஊர்லயாச்சு இந்த அளவிகிதம் போட்டிருக்காங்க?). நல்லவேளையா வெந்தயம் வீட்ல இல்ல. இல்லேன்னா, அது ஒரு ரெண்டு கப் போட்டிருப்பேன். எங்கம்மாவும் விகிதம் சொல்லல, நானும் கேக்கல. ஹி ஹி .
மாவு ஆட்டறதெல்லாம் எங்கம்மா சொன்னபடி தனித்தனியா ஆட்டி, கலந்து ஒரு பாத்திரத்துல வெச்சாச்சு. அம்மாவுக்கு அங்க நைட் ஆய்ட்டதால மாவு புளிச்சதுக்கு அப்புறம் இட்லியோ தோசையோ ஊத்திக்கன்னு சொல்லீட்டு கெளம்பீட்டாங்க. சரி, ஊர்ல எல்லாம் மத்யானம் ஆட்டி வெச்சா ராத்திரிக்கு புளிச்சுருமே (புளிச்சு பொங்கி வழியுறத காப்பாத்தாம வேடிக்கை பாத்து வாங்கிக் கட்டின ஞாபகம்), நைட்டு டிபனுக்கு இட்லி ஊதிக்கலாம்ன்னு ஒரே சந்தோஷமா போய்டுச்சு.
இட்லி வேலை முடிஞ்சுது (பார்றா !), சட்னி? தேங்காய் சட்னி வேண்டாம், புதினா சட்னி பண்ணுவோம், நல்லா இருக்குமேன்னு அதையும் ஆறு மணிக்கே செஞ்சாச்சு. நானும் நாலுமணியில இருந்து பாக்கறேன், மாவு புளிக்கவே இல்லையே! சரி, இன்னைக்கு ஆகாதுன்னு சட்னியத் தூக்கி ப்ரிட்ஜுல வெச்சுட்டு வேற என்னம்மோ சமச்சுட்டேன். அடுத்த நாள் காலைல பாக்கறேன், ம்ஹூம். அப்பவும் மாவு புளிக்கல. மைல்டா டவுட்டு வந்துச்சு. இந்தத் தடவை ஆன்லைன் ரெபரன்ஸ். குளிர் நாடுகளுக்கு மாவு புளிக்க நேரம் எடுக்கும், ஹீட்டார் பக்கத்துல வெக்கணும்ன்னு புரிஞ்சுது. அதே மாதிரி வெச்சுட்டு ராத்திரிக்கு புளிச்சுரும்ன்னு நம்ம்பி காத்துகிட்டு இருந்தேன் .. அப்பவாச்சி புளிச்சுதா? இல்லியே..அடுத்தநாள் காத்தால பாத்தா..
(பெரிய்ய க்ரைம் ஸ்டோரி.. தொடரும் வேற !) ஹி ஹி
பாகம்-2
பாகம்-3
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்- (எழுதியவர்: புலவர் 'தின்னுவர்'.. ஹி ஹி )
இட்லிருசி காணா தார்.

//எட்டு இட்லி (நிஜமாவே எட்டு தாங்க), ரெண்டு வடை, மூணு கப் சாம்பார்ன்னு செம்ம கட்டு கட்டியிருக்கேன். //
ReplyDeleteஹை நம்ம ஆளு. ஐ லக் இட்.
//இட்லி சுடத் தெரியாதுன்னு விட்டுட்டேன் //
இட்லி சுடறது இல்லேக்கா. இட்லி அவிக்கறது. தோசை தான் சுடறது. ஹையோ ஹையோ. சமையலில நீங்க இன்னும் இரண்டாங்கிளாஸ் தான் போல. (சுனாமின்னு சொன்னதுக்கு பழிவாங்கிட்டோம்ல).
//நமக்கு அவ்வளவு நாலேஜ் இட்லி செய்முறைல !//
இப்படி எல்லாம் படிக்கறப்போ அடப்பாவி அக்கா என் கண்முன்னே எதுக்கு வராளே.
//நல்லவேளையா வெந்தயம் வீட்ல இல்ல. இல்லேன்னா, அது ஒரு ரெண்டு கப் போட்டிருப்பேன்//
எங்க ஊரில தோசைக்கு மட்டும்ல வெந்தயம் போடுவாங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். பாவம் மாம்ஸ். தப்பிட்டார். இதெல்லாம் பாக்கிறப்போ அப்பாவி ரங்குஸ் சங்கத்தை நானே தொடங்கிடுவன் போல இருக்கு.
//(பெரிய்ய க்ரைம் ஸ்டோரி.. தொடரும் வேற !) ஹி ஹி//
இது என்ன அடப்பாவியோட இட்லி பதிவோட பார்ட் டூவா? இல்ல எல்லா அக்காக்களுக்கும் இட்லி இவ்வளவு தான் வருமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
இத்தால் அறியத்தருவது யாதெனில், பிரதீபா அக்கா இட்லிமாமி நம்பர் 2 ஆக என்னால் அறிமுகப்படுத்தப்படுகிறார். ஹி ஹி. சீக்கிரம் போடுங்க. இரண்டு பதிவு தொடர்ந்து போடறீங்க. அப்படியே எஸ் ஆகிடாம, முடிச்சிட்டு போங்க. சரியா?
முத இட்லி எனக்கான்னு தோனிச்சு. அப்புறம் இது இட்லியா இல்ல இட்லி மாதிரி இருக்கிற கல்லானு தெரியாம, எதுக்கு வில்லங்கம்னு விட்டுட்டேன். ஹி ஹி.
ReplyDeleteநான் மூணு கப் சாம்பார் சாப்பிடுவதில்லை. மூணு கப் சட்னி.
ReplyDeleteஇட்லிக்கே இவ்வளோ பில்டப்பா! ஆண்டவா!:)))
ReplyDelete//ஆனா அதெல்லாம் சங்ககாலம் மாதிரி திங்ககாலம்ன்னு நெனச்சுக்குவேன்//
ReplyDeleteசெம செம...;))
//நல்லவேளை நீ வந்ததுக்கு அப்புறம் அந்த பிரச்சனை இல்லைன்னாரு//
நீ வந்ததுக்கு அப்புறம் இட்லியே இல்லைன்னு சொல்லி இருப்பாரோ என்னமோ... உனக்கு காது கேக்கலைனு நினைக்கிறேன்..;)))
//நமக்கு அவ்வளவு நாலேஜ் இட்லி செய்முறைல//
ஹா ஹா... இனிமே என்னை யாரும் கிண்டல் பண்ண கூடாது...:)))
// எந்த ஊர்லயாச்சு இந்த அளவிகிதம் போட்டிருக்காங்க...//
ஹும்ஹும்.... சுத்தம் இட்லி போடாது.... :))
//அதே மாதிரி வெச்சுட்டு ராத்திரிக்கு புளிச்சுரும்ன்னு நம்ம்பி காத்துகிட்டு இருந்தேன் .. அப்பவாச்சி புளிச்சுதா?//
புளிக்கும்ம்ம்ம்ம்...... ஆனா புளிக்காது... நானெல்லாம் வருஷ கணக்கா போராடிட்டு இருக்கேன் அம்மணி... உனக்கு மட்டும் ஒரே நாளுல புளிச்சுருமா என்ன...:))
//இப்படி எல்லாம் படிக்கறப்போ அடப்பாவி அக்கா என் கண்முன்னே எதுக்கு வராளே//
ReplyDeleteஎல்லாம் ஒரு பாசம் தான்...:)))))
நீங்க என்னைக்கு இட்லி அவரு சாப்பிட்டு?
ReplyDeleteமேலே இருக்கற இட்லி போட்டோவை பார்த்து கிட்டு வேற எதவாது சாப்பிட வேண்டியது தான்.
interesting aa pocchu, idli enna achu- olunga vandadha!! illa sotahppittiya deepa
ReplyDelete@அனாமிகா: அட சாப்பிடறதுல சுனாமியும் நம்ம செட்டு !!
ReplyDelete//இட்லி சுடறது இல்லேக்கா//- அட எங்கூருபக்கம் இட்லியும் சுடறதுன்னு தான் சொல்லுவாங்க.
//அடப்பாவி அக்கா என் கண்முன்னே எதுக்கு வராளே// - என்ன பண்ண, இனம் இனத்தைத் தான் நினைக்கும். ஹி ஹி
//எங்க ஊரில தோசைக்கு மட்டும்ல வெந்தயம் போடுவாங்க// - ஏம்மா கண்ணு, இட்லிக்கும் தோசைக்கும் தனிதனியாவா மாவு ஆட்ட முடியும்? அதுவும் நானு?
//இது என்ன அடப்பாவியோட இட்லி பதிவோட பார்ட் டூவா? // - அது போன வருஷம், இது இந்த வருஷம் :). அது தனி காமடி, இது தனி காமடி; ஆகமொத்தம் ட்ராஜெடி !! :)
//நம்பர் 2 // இல்ல கண்ணு, பக்கத்துல இருந்தா தான் நம்பர் 2 . நான் அக்கா அளவுக்கு இல்ல.. அதனால, இட்லி இண்டஸ்ட்ரில ஒன் அண்ட் ஒன்லி அக்கா தான் மோனோபாலி :)
//அப்பாவி ரங்குஸ் சங்கத்தை நானே தொடங்கிடுவன்// - எச்சூஸ் மீ, ஒரு நாள் இந்தப் அணியில சேராமலா போய்டுவே கண்ணு ? அப்போ இருக்கு பட்டாசு.
//இது இட்லியா இல்ல இட்லி மாதிரி இருக்கிற கல்லா// - ஹி ஹி
//மூணு கப் சட்னி// - மறுபடியும் சொல்லுவேன், வாழ்க இட்லி !!
@ குசும்பன் : இனிமே இட்லி சாப்ட்டீங்க, அதுல கல்லு இருக்கும்ன்னு சாபம் குடுக்கறேன் :)
ReplyDelete@அப்பாவி தங்கமணி :அக்கோய், டேமேஜ் பண்ணி எதாச்சும் பேசினீங்க, பச்சபயிறு.. பாசிப்பயிறு.. chat log எடுத்து விட்ருவேன்.. வருஷக் கணக்கு இல்ல, நூற்றாண்டுக்கும் மக்கள் கிட்ட இருந்து நோ எஸ்கேப். ஓகே வா ? :)
@பாலகுமார்: லிட்டில்குமார் அண்ணா, நானாச்சும் பரவா இல்ல.உங்கள இட்லி சுடச் சொன்னா இல்ல தெரியும். (அண்ணி கிட்ட கேக்கறேன் இருங்க)
@இளமதி அக்கா: அடுத்த பாகம் இன்னைக்குப் போடறேன் அக்கா. சோகக்கதை தொடரும் :)
//அக்கோய், டேமேஜ் பண்ணி எதாச்சும் பேசினீங்க, பச்சபயிறு.. பாசிப்பயிறு.. chat log எடுத்து விட்ருவேன்.. வருஷக் கணக்கு இல்ல, நூற்றாண்டுக்கும் மக்கள் கிட்ட இருந்து நோ எஸ்கேப். ஓகே வா ? :)//
ReplyDeleteஇங்க பாரு அம்மணி... பேச்சு பேச்சா தான் இருக்கனும்... நோ வன்முறை ஒகே? ஒகே....மீ எஸ்கேப்... :))))
:))!!
ReplyDelete@ தெய்வசுகந்தி: ஆ.. குக் க்வீன் இன்ஸ்பெக்ஷன் வந்துட்டாங்க, மவளே இட்லி இனிமே சொதப்புச்சு, செத்தே.. ஓடு ஓடு பிரதீபா :) உங்க ரெசிபி எல்லாம் சூப்பருங்க. வருகைக்கு நன்றி !! (நம்மளும் கோயமுத்தூரு பக்கந்தானுங்க - கோபி )
ReplyDeleteதனித்தனியாத்தான் வீட்ல ஆட்டுவாங்க. நீங்க? சரி சரி பிழைச்சுப்போங்க.
ReplyDelete//இட்லி இண்டஸ்ட்ரில ஒன் அண்ட் ஒன்லி அக்கா தான் மோனோபாலி :)//
ஐ லைக் இட். அவங்களுக்கு இட்லி ஓடர் பண்ண கூட தெரியாது. அந்த கொடுமை என்னான்னு தெரியுமா?
//எச்சூஸ் மீ, ஒரு நாள் இந்தப் அணியில சேராமலா போய்டுவே கண்ணு ? அப்போ இருக்கு பட்டாசு.//
ஹி ஹி. நீங்க எல்லாம் ரங்குகளுக்கு பண்ணற கொடுமை போதாதுன்னு, நான் ஒருத்தியும் பண்ணனுமா. ஒரு பையன் பிழைச்சுப்போகட்டும். விட்டுடுவோம். ஹி ஹி.
ஐ லவ் இட்லி. உடல் நிறை குறைய வேண்டும் என்கிறவர்கள், சப்பாத்தியை விட இட்லியை சாப்பிடலாம்.