Monday 9 May 2011

ஆபரேஷன் 'ஜாஸ்மின் இட்லி'-பாகம் 3

பாகம்-1 பாகம்-2
சபதமெல்லாம் அண்ணாமலை ரஜினியாட்டம் நல்லாத் தான் எடுத்தேன். அதை நிறைவேத்தறதுக்குள்ள எத்தன உணர்வுகள்!

"விக்கிலீக்ஸ் தெரியும், ஒய் இட்லி லீக்ஸ்? "
"உப்பு மட்டும் சரியாப் போட்டிருந்தேன்னா.."
"ஒண்ணுமில்லாத ஒன்றை அனா இட்லிக்கு எதுக்குத் தான் அந்த முருகன் இட்லிக் கடைக்கு அத்தன கூட்டமோ"
"கருமம் இந்தக் குளிருல கஷ்டப்படனும்ன்னு என்ன தலையெழுத்தா?"
"ஏங்க, எத்தன தடவ குப்பையில போடறது, இந்த வாட்டி நம்மளே..."

எல்லாத்தையும் சொன்னேன்னா இன்னொரு தொடரும் வரும் (யாருங்க அங்க ஓடறது? உக்காருங்க, நான் இன்னியோட முடிச்சுக்குவேன்).இந்த மாதிரி பலப் பல இடர்கள், இட்லிகளை சந்திச்ச பிறகு, ஒரு நாள் எதிர்பாத்தபடி வந்திச்சப்பா இட்லி-பஞ்சாட்டமா, மல்லியப்பூவாட்டமா !

ஆபரேஷன் ஜாஸ்மின் இட்லி சக்சஸ் !!
 (இட்லியும், மீன் கொழம்பும்)

வழிமுறைகளும், குறிப்புகளும் (எனது அனுபவத்தில், குளிர்நாடுகளுக்கு ஏத்தபடி):

இட்லி-சுடும்போது மட்டும் வர்றதில்ல அதோட குணம். மாவுக்கு ஊறவெக்கரதுல இருந்து, பதமா ஆட்டி, அப்புறம் புளிக்க வெக்கற வரைக்கும் ரொம்ப முக்கியம்.  அரிசி-நல்ல இட்லி வேணும்ன்னா வேற வழி இல்லை, இட்லி அரிசி தான் வேணும். உளுந்து-எந்த உளுந்துன்னாலும் பரவா இல்ல. பொட்டுளுந்து (தோல் நீக்காதது) நெறைய மாவாகும், ஆனா வேலை எடுக்கும். வெந்தயம்- அதே மாவ தோசைக்கும் வெச்சுக்கலாம்ன்னா சேத்துக்கலாம்; தோசை பொன்னிறமா வரும். இந்த மூனையும் 4 கப் :1 கப் :1 ஸ்பூன் விகிதத்துல எடுத்துக்கங்க. அரிசியை தனியாவும், மத்த ரெண்டை தனியாவும் ஊற வெச்சுக்கலாம்.

எட்டுல இருந்து பத்து மணி நேரம் ஊறனும். அப்ப தான் மாவு ஆட்டுனதுல இருந்தே புளிக்கிறதுக்கு தயாராகும். மிக்சியில மாவு ஆட்டலாம். ஆனா ரொம்பப் பொறுமை வேணும் அதுல மாவு அரைக்க; நிறுத்தி நிறுத்தி, கொஞ்சங் கொஞ்சமா, மிக்சி மோட்டார், மாவு சூடாகாம ! இட்லி மேல அவ்வளோ பிரியம் வெச்சிருக்கீங்கன்னா கிரைண்டர் ஒன்னு வாங்கரதுல தப்பே இல்லை;

மொதல்ல உளுந்து+வெந்தயம் நல்லாக் கழுவிட்டு அரைக்கணும். எடுத்த உடனே நெறையா தண்ணி ஊத்தி அரைக்கட்டும்ன்னு விட்றாதீங்க. இங்கதான் விஷயமே. மொதல்ல கொஞ்சமா தண்ணி ஊத்தி, உளுந்து நல்லா அரைபட அரைபட அப்பறமா தேவையான தண்ணி சேக்கணும். அப்பதான் உளுந்து மாவு நல்லா நுரச்சு வரும்; அதுதான் இட்லி பஞ்சாட்டமா வர்றதுக்கான காரணமே.. நல்லா நைசா அரச்சு முடிச்சுட்டு அத்தனயும் தனியா ஒரு பெரிய பாத்தரத்துல எடுத்து வெச்சுக்கோங்க. அடுத்தது அரிசியக் கழுவிட்டு, அதே மாதிரி தண்ணி கொஞ்சமா விட்டு விட்டு நைசா அரச்சதுக்கு அப்புறம் அதை உளுந்து மாவோட சேத்துக்கோங்க. ரெண்டு பகுதியில எந்த மாவு அரைக்கும்போதாவது தெரியாம தண்ணி ஜாஸ்தியாப் போயிடுச்சுன்னா அடுத்ததுக்கு கம்மியா இருக்கட்டும். இப்ப ரெண்டு மாவையும் ரெண்டு ஸ்பூன் உப்பு போட்டு நல்..லாக் கலக்கணும். இந்த இடத்துக்கு சுத்தம் சோறு (இட்லி) போடாதுங்க. என்னதான் கொஞ்சம் ஈஸ்ட் சேத்துகிட்டாக் கூட கையில கலக்கினா தான் மாவு புளிக்கும். நோ கரண்டி கலக்கிங்க்ஸ். ("இதெல்லாம் தெரியாமலா இருக்கோம் நாங்க?"-அவ்வ்வ்வ்)

நம்மூருபக்கம்ன்னா அடிக்கிற வெய்யிலுக்கு மத்யானம் மாவாட்டி வெச்சா சாய்ந்தரதுக்கே இட்லிதோசை சாப்பிடலாம். குளிர் நாடுகள்ல? ம்ஹூம் பொறுமை; பொறுமை எருமையை விடப் பெரியது. மாவுப் பாத்திரத்தக் கொண்டு போயி ஹீட்டர் மண்டை மேல வெக்கக்கூடாது; மாவு கோவிச்சுக்கும். புளிக்கறேன் புளிக்கறேன்னு கடசீல கெட்டே போகவும் வாய்ப்பிருக்கு. எந்த ரூம் ஹீட்டர் போட்டு கொஞ்சம் வெதுவெதுன்னு இருக்குமோ, அங்க வெச்சாலே போதும். இல்லைன்னா ஓவன்ல லைட்டு போட்டு மாவுப் பாத்திரத்த அதுக்கு உள்ள வெச்சிருங்க, அடுத்த நாளே(ளே?) புளிச்சுரும்.

நான் இப்பெல்லாம் முந்தின நாள் சாயந்தரம் மாவாட்டி வெச்சா அடுத்த நாள் காலைல இட்லி ஊத்தறேன். ஓல்டு ஸ்டைல் இட்லி தட்டுன்னா துணி போட்டு எண்ணை இல்லாம வேகும்; ஆனா சில்வர் தட்டுன்னா? சில பேரு இட்லி தட்டுல ஒட்டாம வர லேசா எண்ணை தேச்சு அப்புறம் மாவு ஊத்துவாங்க. ஆனா அப்படி தேவை இல்லை. இட்லித் தட்டை ஒரு கழுவு கழுவி, ஈரப்பதத்துல மாவு ஊத்துங்க. பத்து நிமிஷத்துல இட்லி ரெடி ஆய்டும் (சந்தேகமிருந்தா கருவேப்பில்லைக் குச்சி அல்லது போர்க்கில் குத்திப் பார்க்கவும்). கொஞ்ச நேரம் ஆற விட்டுட்டு எடுத்தாலோ அல்லது இட்லித் தட்டை திருப்பி டேப் தண்ணீரில் கொஞ்சம் குளிரவைத்தோ இட்லி எடுத்தால், ஒட்டாமல் வரும். அவ்வளவுதான் ! இனி என்னா? லபக் லபக் தான் !! இந்த செய்முறை எனக்கு வந்தது அடிப்படையில தான். இன்னும் எக்ஸ்பர்ட் தங்கமணிகள்/ரங்கமணிகள் இருந்தா, குறிப்பு குடுங்க, இட்லி கொட்டா (குப்பையில) சமுதாயத்தை உருவாக்குவோம்.
(சத்தியமா நாஞ்சுட்ட இட்லிதான்)

என்னதான் எங்க மாமியார் அளவுக்கு இல்லைன்னாலும், இங்க இருக்கற நட்புகள், சொந்தங்கள் எல்லாரும் பாராட்டற அளவுக்கு இப்போ இட்லி சுட வருது. சிலர் நல்லா இருக்குன்னு மாவு வாங்கீட்டுப் போயிருக்காங்க. "ஜாஸ்மின் இட்லி" ன்னு இங்க லண்டன் ல ஒரு இட்லிக்கடை போடலாம்ன்னு.. எனி பைனான்சியர் ப்ளீஸ்? :)


17 comments:

  1. Kalakiteenga Ponga!!! Oru vazhiya idli a sutti thaliteenga pola!! But dunno how I never had this trouble in Switz, Idli always came out as desired.. :)

    ReplyDelete
  2. எங்க அப்பாவி அக்காவை நினைச்சு போட்ட இட்லி பதிவு போல இருக்கே. இட்லி சூப்பரோ சூப்பர்.

    ReplyDelete
  3. //பஞ்சாட்டமா, மல்லியப்பூவாட்டமா !//
    பஞ்சாட்டமா? பறந்து போய்டலியே...:)
    மல்லிகை பூவை தலைல வெச்சுட்டியோ... சும்மா கேட்டேன்...:))

    //மாவுக்கு ஊறவெக்கரதுல இருந்து//
    ஓஹோ...அங்கேயே ஆரம்பிக்குதா ஏழரை...:)))

    //அப்பதான் உளுந்து மாவு நல்லா நுரச்சு வரும்//
    ஒரு வேளை அப்படியும் நுரச்சு வரலேன்னா வாஷிங் பவுடர் நிர்மா சேத்துக்கலாமா? எவ்ளோ சேக்கணும்...:))

    //ரெண்டு பகுதியில எந்த மாவு அரைக்கும்போதாவது தெரியாம தண்ணி ஜாஸ்தியாப் போயிடுச்சுன்னா அடுத்ததுக்கு கம்மியா இருக்கட்டும்//
    ரெண்டுலயுமே ஜாஸ்தி ஆய்டுசுன்னா... டவுட் தான்... டென்ஷன் ஆகாதே தீபா..:))

    //என்னதான் கொஞ்சம் ஈஸ்ட் சேத்துகிட்டாக் கூட கையில கலக்கினா தான் மாவு புளிக்கும். நோ கரண்டி கலக்கிங்க்ஸ்//
    ஓஹோ... இதைதான் கைமணம் கைமணம்னு சொல்றதோ...:))

    //இல்லைன்னா ஓவன்ல லைட்டு போட்டு மாவுப் பாத்திரத்த அதுக்கு உள்ள வெச்சிருங்க//
    ஓவன்குள்ள காவலுக்கு நாம உக்கார வேண்டியதில்லையோ... சும்மா கேட்டேன்... :)))

    //சந்தேகமிருந்தா கருவேப்பில்லைக் குச்சி அல்லது போர்க்கில் குத்திப் பார்க்கவும்//
    யாரை குத்தனும்...:)

    //இட்லி கொட்டா (குப்பையில) சமுதாயத்தை உருவாக்குவோம்//
    ROFL ....:))

    //"ஜாஸ்மின் இட்லி" ன்னு இங்க லண்டன் ல ஒரு இட்லிக்கடை போடலாம்ன்னு.. //
    யாரு அந்த ஜாஸ்மின்...ஓ... மல்லிகைபூனு சிம்பாலிக்கா சொல்றீங்களா? அட அட அட... எது இருக்கோ இல்லையோ... இந்த வாய் உள்ள புள்ளை பொழைக்கும்னு சொல்லுவாங்களோ... அதுல நீ பெரிய பிஸ்னஸ் வுமன் ஆவாய் என ஆருடம் சொல்கிறேன்...:)))))

    ஹா ஹா ஹா...செம போஸ்ட்... couldn't resist posting series of comments...:)))

    ReplyDelete
  4. //vanathy said...
    எங்க அப்பாவி அக்காவை நினைச்சு போட்ட இட்லி பதிவு போல இருக்கே. இட்லி சூப்பரோ சூப்பர்.//

    ha ha ha...:))

    ReplyDelete
  5. Neenga enna sonnalum namba maaten..Veetuku varapo Idli suttu podunga..appuram parkalam. :)

    ReplyDelete
  6. @ரோகினி: கண்ணு, செய்யத் தெரிஞ்சவங்களுக்கு ஒரு கவலை - "எத்தன சுடனுமோ" ன்னு; என்னை மாதிரி செய்யத் தெரியாதவங்களுக்கு (புதூ....சா இட்லி சுடரவங்களுக்கு) பல கவலை "எப்படி சுடனுமோ" :)

    @வானதி: அப்பாவி கேட்டா கோவிச்சுக்கப் போறாங்க. பின்ன, அவங்க சொல்லி வந்தது தான் பார்ட் 1, 2 ல செஞ்ச இட்லி :)

    @அப்பாவி தங்கமணி : வாங். தலைல ? கர்ர்ர்ர்.
    //ஒரு வேளை அப்படியும் நுரச்சு வரலேன்னா வாஷிங் பவுடர் நிர்மா சேத்துக்கலாமா? //--சேர்க்காமலேயே பார்ட்-1,2 இட்லி பேதி புடுங்கும், சேத்துகிட்டா எப்படி இருக்கும்ன்னு நீங்களே யோசிச்சுக்கோங்க. //எவ்ளோ சேக்கணும்//- அது உங்க tolerance பொறுத்தது. ஹி ஹி

    //ரெண்டுலயுமே ஜாஸ்தி ஆய்டுசுன்னா// - சுட வேண்டாம், அப்படியே குடிச்சுக்கலாம் :)

    //ஓவன்குள்ள காவலுக்கு நாம உக்கார வேண்டியதில்லையோ// - தாராளமா உக்காரலாம், நம்ம சைசுக்கு எடமிருந்தா !

    //யாரை குத்தனும்//- பக்கத்துல யாரு இருக்காங்களோ, அவிங்களத்தான் !

    //வாய் உள்ள புள்ளை பொழைக்கும்// - இங்க இருக்கறவங்க எல்லாம் வாயக் கொறச்சாப் பொழைப்பேன்னு சொல்றாங்கக்கா.. என்னான்னு வந்து கேளுங்க :)

    @raja : நர்சரி பிரெண்டு, நம்பவா மாட்டேங்கறீங்க? வீட்டுப்பக்கம் வாங்க, பார்ட்-1 இட்லி சுட்டுத் தர்றேன்.

    ReplyDelete
  7. Oru idly sudratha kuda thotara ellutha mudiyuma enna.. achiryama eruku pradhiba.. naghaisuvaiyana eluthu nadai - mani.

    ReplyDelete
  8. ஆஹா... மல்லிகைப்பூ இட்லிக்கு இப்படி கூட ரெசிபி சொல்ல முடியுமா? அடிச்சு தூள் கிளப்பிட்டீங்க.... Follow பண்றேன். அடுத்து போடுற ரெசிபி மிஸ் ஆக கூடாதே.... :-))))))

    ReplyDelete
  9. @Manivannan: என்ன பண்றது சொல்லுங்க, நம்ம இட்லி செய்யக் கத்துகிட்ட லட்சணம் அப்படி :) படித்தமைக்கு நன்றி.

    @சித்ரா : வாங்க வாங்க.. அடுத்த ரெசிபி? டர்ர்ர்ர்ர்.. நல்லா காமடி பண்றீங்க நீங்க. இந்த ரெசிபி ஏதோ நாஞ்சுட்ட இட்லிலேயே முட்டி மோதி அப்புறமா ஒழுங்கா வந்தது. இன்னமும் எதாச்சும் ரெசிபி குடுத்தேன், மக்கள் என்னை அக்குவேறா ஆணிவேறா பிச்சுப்போடுவாங்க அக்கோய் :)

    ReplyDelete
  10. கலக்கிடீங்க பிரதீபா. அப்பாவி அக்கா & உங்களோட கமெண்ட்ஸ்-அ படிச்சு சிரிச்சு வயிறே வலிக்குது. ம்ம்ம் பாலோ பண்ண ஆரம்பிச்சுட்டேன்.

    ReplyDelete
  11. சூப்பர் சூப்பர் !!!!!!!.லண்டன்லருந்து மிட்லண்ட்சுக்கு ராயல் மெயில் எக்ஸ்பிரஸ் போஸ்டில் மீன் குழம்போடு அனுப்பவும் .

    ReplyDelete
  12. @ ChitraKrishna : //அப்பாவி அக்கா & உங்களோட கமெண்ட்ஸ்-அ படிச்சு சிரிச்சு வயிறே வலிக்குது// - உங்களுக்காச்சும் சிரிச்சு மட்டும் தான் வயிறு வலிக்குது.. எங்க அப்பாவியக்கா மச்சானும், என் மச்சானும் சாப்பிட்டே வயிறு வலிச்சவுங்க :) நன்றி !

    @angelin : போஸ்ட் கோடு குடுங்க, அனுப்பீட்டா போகுது விடுங்க :) நன்றி !!

    ReplyDelete
  13. ஸ்மால் டிப் எதோ நமக்கு தெரிஞ்சது, அரிசி மாவோட கொஞ்சம் ஜவரிசி போட்டா இட்லி இன்னும் பூவாட்டம் வரும்னு எங்க பக்கத்தாத்து மாமி சொல்லுவா.

    பிரதீபா, சமையல்ல பிச்சு ஓதர்றேல் எங்க சில்லி சிக்கன் பத்தி ஒரு கமெண்டும் சொல்லலே?

    ReplyDelete
  14. @ pingu: ஊருக்குப் போனா நீங்க சொன்னாப்புல ஜவ்வரிசி போட்டு ட்ரை பண்ணிட்டா போகுது !

    சிக்கனா? எங்கே சிக்கன் எங்கே சிக்கன்?

    ReplyDelete
  15. என்ன பிரதீபா சிக்கன் சாப்பிடேளே அதுக்குள்ளே மறதுட்டேளே.

    ReplyDelete
  16. சிரிச்சு வயிறு குலுங்கி...;-)))

    முயச்சி உடையோர் இகழ்ச்சி அடையார்! கடைசியில் பார்மமுலாவை கண்டு பிடிச்சு கரெக்டா செய்தீர்கள். இய்த எட்டு மாதங்களில் இன்னும் எத்தனை எக்ஸ்பெரிமெண்ட் இருந்திருக்கும். எழுதுங்கள்.

    உங்கள் பதிவு ப்ளாகர்களுக்கு தேவை, you have excellent sense of humour!

    Enjoyed it
    thanks.

    ReplyDelete
  17. நன்றிங்க வெற்றிமகள். தொடர்ந்து பதிவுகள் எழுத முயல்கிறேன்.

    ReplyDelete

தட்டிக்கொடுத்தும் திட்டுக்கொடுத்தும்......